உலக்க் கோப்பையால் ஸ்தம்பித்த சென்னை: தெருக்கள் வெறிச்சோடின
சென்னை: சென்னைவாசிகள் இந்தியா, இலங்கை இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க டிவி பெட்டிகள் முன்பு குழுமிக் கிடந்ததால், நகர வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.

நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஒரு அசைவைக் கூட விடாமல் பார்க்கும் ஆசையில் கிரிக்கெட் ரசிகர்கள் உணவகங்கள், பார்கள் மற்றும் மால்களில் குவிந்தனர். காரணம் அங்குள்ள பெரிய திரைகளில் கிரிக்கெட் பார்க்கத் தான்.
நகரமெல்லாம் கிரிக்கெட் பேச்சு தான். சிலர் தங்கள் வீடுகளிலும், சிலர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்தும் இந்தியா புதிய வரலாறு படைத்ததைப் பார்த்து ரசித்தனர்.
நான் என் சக ஊழியருடன் சென்று எனது நண்பர் வீட்டில் கிரிக்கெட் பார்த்தேன் என்றார் அண்ணா நகரைச் சேர்ந்த கே.ஆனந்த். இந்தியா டாஸில் தோற்றவுடன் வருத்தமாக இருந்தது. ஆனால் அணியின் மீது நம்பிக்கை இருந்தது என்றார் அவர்.
உணவகங்கள் உள்ளிட்ட இடஙகளில் ரசிகர்கள் குவிந்தனர். காரணம் கிரிக்கெட் காய்ச்சல். இந்தியா பந்துவீசியபோது கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் கூட்டம் அலைமோதியது என்றார் சென்னையில் உள்ள பார்பெய்ட் 3 உணவகங்களின் உரிமையாளர் கே. ராஜேஷ். நேற்று சென்னை உணவகங்களில் உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று சென்னையே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அகர்வால் வித்யாலயா பள்ளியில் மக்களுக்காக பெரிய திரையில் கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டது. அங்கு கிரிக்கெட் பார்த்து ரசித்த கோவர்தன் அகர்வால்(51) கூறுகையில், மொகாலியில் இந்தியா பாகிஸ்தானை வென்றபோதே உலகக் கோப்பையை வென்றுவிட்டது என்றார்.
நேற்று மதியம் இறுதிப் போட்டி ஆரம்பித்தவுடனே தெருக்களில் மக்கள் நடமாட்டமே இல்லை. மாறாக எங்கெல்லாம் கிரிக்கெட் ஒளிபரப்பாகிறதோ அங்கெல்லாம் மக்கள் குவிந்தனர்.
நிற்கக்கூட இல்லாத சிறிய உணவகங்களில் கூட ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நகரத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் வரிசையாக பைக்குகளில் இந்தியக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
நேற்று சத்யம் திரையரங்கிலும் கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டது. அதனால் அங்கும் ரசிகர்கள் கூட்டம் தான். போக்குவரத்து காவலர்கள் தங்கள் செல்போன்களில் அவ்வப்போது ஆட்டம் பற்றி பிறிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka
Story first published: Thursday, June 7, 2012, 12:22 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications