Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை வென்ற நியூசிலாந்து

New Zealand vs Kenya Match
சென்னை: சென்னையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் வெறும் 7.2 ஓவர்களில், 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை வென்றது நியூசிலாந்து.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று கோலா கலமாக தொடங்கியது. வங்காள தேசத்தில் உள்ள மிர்புரில் நேற்று முதல் போட்டி நடந்தது. இந்தியா, வங்காளதேச அணிகள் மோதியது. இதில் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்று 2வது ஆட்டம் சென்னையில் நடந்தது. நியூசிலாந்து, கென்யா அணிகள் மோதிய இந்தப் போட்டியில் கென்யா கேப்டன் கமாண்டே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஓமாண்டா, வாட்டர்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு பயந்து இருவரும் மிகவும் நிதானமாக ஆடினார்கள். ரன் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் இருந்தது.

இதனால் 5 ஓவர் முடிவில் 9 ரன்களே எடுத்திருந்தனர். தொடக்க வீரர் ஒமான்டா 6 ரன் எடுத்திருந்த போது சவுதி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தனர். அப்போது கென்யா ஸ்கோர் 7.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்களாக இருந்தது.

அடுத்து வாட்டர்சுடன் ஒபுயா ஜோடி சேர்ந்தார். அவர் அதிரடியாக ஆடினார். அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். சிறிது நேரத்தில் ஒபுயா எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 14 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் களம் வந்த வீரர்கள் நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் கென்யா அணி 23.5 ஓவரில் 69 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து வெறும் 7.2 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை வென்றது.

கென்யா எடுத்த இந்த 66 தான் உலகக் கோப்பை போட்டிகளிலேயே எடுக்கப்பட்ட மிகக் குறைவான ரன்களாகும்.

நியூசிலாந்து, கென்யா அணிகள் மோதுவதால் இந்த போட்டியைக் காண சென்னை ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் மைதானம் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+