
இலங்கையின் சாதனை
2003 உலக கோப்பையின்போது 18.4 ஓவர்களில் கனடாவை 36 ரன்களில் சுருட்டியது இலங்கை. 2வதாக பேட் செய்த இலங்கை 4.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ரன்கள் எடுத்தது. இதுதான் மிக விரைந்து முடிந்த போட்டிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த போட்டியாகும்.

பலே மே.இ.தீவுகள்
2011 உலக கோப்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது வங்கதேசம். 12.2 ஓவர்களில் விரட்டி பிடித்தது மே.இ.தீவுகள்.

நியூசிலாந்து
2007 உலக கோப்பையின்போது கென்யா 69 ரன்களில் அவுட் ஆன நிலையில், 8 ஓவர்களில் அதை நியூசிலாந்து விரட்டி பிடித்தது.

மீண்டும் இலங்கை
2007 உலக கோப்பையில் அயர்லாந்தை 77 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இலங்கை 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து வென்றது.

மீண்டும் மே.இ.தீவுகள் சூப்பர்
1999 உலக கோப்பையின்போது, ஸ்காட்லாந்தை 68 ரன்களில் சுருட்டிய மே.இ.தீவுகள் அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து அசத்தியது.

அயர்லாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா
2007 உலக கோப்பையின்போது அயர்லாந்து 91 ரன்களில் ஆல் அவுட்டாக, 12.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா சேஸ் செய்தது.

தென் ஆப்பிரிக்காவும்
2003ல் வங்கதேசம் 108 ரன்களில் அவுட்டாக, 12 ஓவர்களில் துரத்தி பிடித்தது தென் ஆப்பிரிக்கா.

இங்கிலாந்திடம் கனடா சரண்
1979ல் கனடாவை 45 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து, 13.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இலங்கைக்கு சோதனை
1987ல் மே.இ.தீவுகள் அணி இலங்கையை வெறும் 86 ரன்களில் சுருட்டிப்போட்டுவிட்டு 20.4 ஓவர்களில் வெற்றிக் கனியை தட்டிப்பறித்தது. இன்றைய இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டி இந்த பட்டியலில் 10வதாக சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications