Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை படுதோல்வி: கிண்டலடித்த இருவருக்கு அரிவாள்வெட்டு- கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதி!!

கிளிநொச்சி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இரு அணி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரஜினிகாந்த், விஜயகாந்த் என்ற இளைஞர்கள் அரிவாள் வெட்டு காயத்துடன் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக கிளிநொச்சியில் இரு அணி ரசிகர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

World Cup 2015: Angry lankan fans attack SA fans

தென்னாப்பிரிக்கா அணி ரசிகர்கள், இலங்கை அணியின் கேவலமான தோல்வியை கிண்டல் செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த இலங்கை அணி ரசிகர்கள், தென்னாப்பிரிக்கா ரசிகர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ரஜினிகாந்த், விஜயகாந்த் என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Friday, March 20, 2015, 17:58 [IST]
Other articles published on Mar 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+