For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் அதிக ரன்கள்.. இந்தியாவின் சாதனையை தகர்த்தது ஆஸ்திரேலியா!

By Veera Kumar

பெர்த்: ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இது உலக கோப்பை தொடரில் ஒரு அணி அடிக்கும் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, இந்தியா படைத்திருந்த 413 ரன்கள் என்ற சாதனை இதனால், தகர்க்கப்பட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் நடுவேயான போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடந்தது.

World Cup 2015: Australia break India's record

டாசில் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்களை குவித்தது.

உலக கோப்பை தொடர்களில், ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்திருந்ததே இதுவரையில் அதிகபட்ச ஸ்கோராக நீடித்து வந்தது. இன்று இந்தியாவிடமிருந்து அந்த சாதனை, ஆஸ்திரேலியவசமாகியுள்ளது.

சாதனைகள்:

6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள்- ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்-2015

5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள்-இந்தியா-பெர்முடா-2007

4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள்- தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து-2015

5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள்- தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள்-2015

5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள்-இலங்கை-கென்யா-1996.

நடப்பு உலக கோப்பையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3 முறை நானூறு ரன்கள் கடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 4, 2015, 16:20 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
Australia today broke India's World Cup record in their Pool A match against debutants Afghanistan at WACA ground.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+