Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சுண்டைக்காய்' 'சுள்ளான்' டீம்.. இந்திய வீரர்களின் எகத்தாளத்தை ஒட்டுக்கேட்ட வங்கதேச கேப்டன் 'ஷாக்'!

ஆக்லாந்து: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதியில் தங்களுடன் மோதும் வங்கதேச அணியை இந்திய அணி வீரர்கள் விமர்சித்ததை காதுபட கேட்ட அதன் கேப்டன் மோர்டசா அதிர்ச்சியில் உறைந்து போனாராம்.

இந்திய அணி கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. இந்த போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.

அந்த போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர். அதே ஹோட்டலில்தான் வங்க தேச அணியும் தங்கியிருந்தது.

ஹோட்டலில் லிப்ட்டுக்காக இந்திய வீரர்கள் காத்திருந்தபோது, அருகில் வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசாவும் இருந்துள்ளார்.

World Cup 2015: Bangladesh believe they can upset India in quarterfinals

இதனை கவனிக்காத இந்திய வீரர்கள் சிலர், காலிறுதியில் வங்க தேசத்துடன் மோதவுள்ளது குறித்து நையாண்டியாக பேசியிருக்கின்றனர். வங்கதேசம் எல்லாம் ஒரு டீமா? சுள்ளானுக.. என்ற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார்கள்.

இதனை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். இதனால் இந்தியாவுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று சூளுரைத்திருக்கிறாராம் அவர்.

கால் இறுதியில் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 17, 2015, 14:11 [IST]
Other articles published on Mar 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+