Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி மண்ணில் எப்படி ரன், விக்கெட் எடுப்பது என டோணி பாய்ஸுக்கு தெரியும்: கேப்டன் கிளார்க்

சிட்னி: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அதிகம் விளையாடிவிட்டது. அதனால் அந்த அணியினருக்கு இங்கு ரன் எடுக்க, விக்கெட் எடுக்க நன்கு தெரிந்துவிட்டது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி நகரில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இந்திய அணி பற்றி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,

இந்திய அணி

இந்திய அணி

இந்கிய அணி ஆஸ்திரேலியாவில் அதிகம் விளையாடிவிட்டது. அதனால் அவர்களுக்கு இந்த மண்ணில் எப்படி விக்கெட் எடுப்பது, ரன் எடுப்பது என்பது நன்கு தெரிந்துவிட்டது. அதை அவர்கள் உலகக் கோப்பை தொடரில் காண்பித்துள்ளனர்.

டோணி

டோணி

டெஸ்ட் மற்றும் முத்தரப்பு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணியை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளதற்கு டோணியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

சிட்னி பிட்ச்

சிட்னி பிட்ச்

சிட்னி பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது. பேட்ஸ்மேன்களால் ரன்களை அள்ளிக் குவிக்க முடியும்.

எங்கள் மண்

எங்கள் மண்

எங்களின் சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வலுவான இந்திய அணியை எதிர்கொள்வது சவாலான விஷயம் தான்.

பலம்

பலம்

நாங்கள் இந்திய அணியை எதிர்த்து பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அவர்களின் பலங்களும், பலவீனங்களும் எங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் திறமையாக விளையாடினால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று கிளார்க் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 26, 2015, 13:50 [IST]
Other articles published on Mar 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+