உலகக் கோப்பை: டோணி அணியால் யாரையும் தோற்கடிக்க முடியும்: தென்னாப்பிரிக்க வீரர் மோர்கல்
பெர்த்: உலகக் கோப்பை போட்டிகளில் எந்த அணியையும் இந்தியாவால் தோற்கடிக்க முடியும் என்று தென்னாப்பிரிக்க வீரர் ஆல்பீ மோர்கல் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா தென்னாப்பிரிக்காவை தோற்கடித்துள்ளது. அதுவும் 130 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. இந்த போட்டியை விடுப்பில் இருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஆல்பீ மோர்கல் பார்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

போட்டி
இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டத்தை பார்த்தேன். அதன் முடிவு தான் எதிர்பாராத வகையில் இருந்தது. அந்த நாள் தென்னாப்பிரிக்க அணிக்கு சிறந்த நாள் இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்கா அதில் இருந்து மீண்டு வரும்.

இந்தியா
இந்திய அணியால் உலகக் கோப்பை போட்டியில் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும்.

அரையிறுதி
உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நான்கு அணிகள் தேர்வு பெறும் என்று நம்புகிறேன்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்க அணி வலுவாகத் தான் உள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் தோல்வி அடைந்தது என்று தெரியவில்லை என்றார் மோர்கல்.

வராதீர்கள்
தோல்வி அடைந்தவர்களாக நாடு திரும்பாதீர்கள் என்று தென்னாப்பிரிக்க அணியிடம் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் பிகில் பலூலா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications