Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நமக்கே ஜெயம்: நிபுணர்கள்

டெல்லி: நாளை மறுநாள் அடிலெய்ட் நகரில் நடக்க உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்கின்றனர் நிபுணர்கள்.

உலகக் கோப்பை போட்டிகள் துவங்கிவிட்டது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் இருக்கும் ஓவல் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. இந்நிலையில் நாளை மறுநாள் நடக்கும் போட்டியிலும் இந்தியாவே வெல்லும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

இரண்டு அணிகளுமே சிறப்பான ஃபார்மில் இல்லை. அதனால் பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியும். நியூசிலாந்திற்கு எதிரான 2 போட்டிகளில் தற்போது தான் பாகிஸ்தான் தோற்றுள்ளது. அவர்களால் அமீரகத்தில் நடந்த போட்டிகளில் கூட ஜொலிக்க முடியவில்லை. அதனால் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும் என்று கூறலாம் என்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.

லக்ஷ்மண்

லக்ஷ்மண்

பாகிஸ்தான் ஆபத்தான அணி தான். ஆனால் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடவில்லை. அவர்கள் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு பதில் வேறு ஆளை போடவில்லை. அவரை தான் அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். அவரைப் போன்று அந்த அணியில் வேறு யாராலும் விக்கெட் எடுக்க முடியாது. இந்நிலையில் பாகிஸ்தானை இந்தியாவால் வீழ்த்த முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண்

இயன் சாப்பல்

இயன் சாப்பல்

தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் போட்டியை வெல்லும் அளவுக்கு திறமை வாய்ந்த் வீரர்கள் இல்லை. பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஜாவித் மியான்தத், இன்சமாம் போன்ற அசத்தல் வீரர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது அப்படி யாரும் இல்லை. அதிலும் பந்துவீச்சில் ஜுனைத் கானை இழந்தது அந்த அணிக்கு விழுந்த அடி. இதனால் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திவிடலாம். உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற முதல் இந்திய அணி என்ற பெயரைப் பெற தற்போதைய அணி விரும்பாது. அதனால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.

ஆவல்

ஆவல்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை தான் இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Story first published: Friday, February 13, 2015, 16:28 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+