ஹா, அமீரக அணி தானே என லேசில் நினைக்க மாட்டோம்: ஷிகர் தவான்
பெர்த்: நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமீரக அணியை லேசாக நினைத்து விளையாட மாட்டோம் என்று இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை எதிர்கொண்டது. இரண்டு போட்டிகளிலும் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதும் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டி குறித்து இந்திய அணி வீரர் ஷிகர் தவான் கூறுகையில்,

அமீரகம்
ஐக்கிய அரபு அமீரக அணியை நாங்கள் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. பிற போட்டிகளை போன்று தான் நாளையும் விளையாடுவோம்.

பெர்த்
பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் விளையாடியுள்ளோம். அதனால் அந்த பிட்ச் பற்றி நன்கு தெரியும். அந்த அனுபவத்தை நாளை பயன்படுத்துவோம் என்றார் தவான்.

பயிற்சியாளர் பிளெட்சர்
இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் மாமனார் இறந்துவிட்டதால் அவர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய வீரர்கள்
இந்திய அணியில் பெரிய நட்சத்திர ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஆனால் அதை பார்த்து நாங்கள் மிரள மாட்டோம் என்று அமீரக அணியின் கேப்டன் முகமது தவ்கிர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications