
ஃபார்ம்
அண்மை காலமாக டோணியின் ஃபார்ம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. கடந்த 5 மாதங்களில் அவர் ஒரேயொரு முறை மட்டும் 50 ரன்களை தொட்டுள்ளார்.

பேட்டிங்
டோணியின் பேட்டிங்கை யாராலும் யூகிக்க முடியாது. அவர் எப்பொழுது, எப்படி அடிப்பார் என தெரியாது. திடீர் என விளாசித் தள்ளுவார், திடீர் என சத்தமில்லாமல் அவுட்டாகிவிடுவார்.

உலகக் கோப்பை பிரஷர்
உலகக் கோப்பை போட்டிகளை நினைத்துக் கொண்டே இருந்ததால் டோணி அண்மை காலமாக சரியாக விளையாடவில்லையா என்பது சரியாகத் தெரியவில்லை. டோணியின் ஃபார்ம் கவலை அளித்தாலும் வியூகம் பக்காவாக உள்ளது.

பாதிப்பு
ஓவராக விளையாடுவது அல்லது உலகக் கோப்பை பிரஷர் தான் டோணியின் ஆட்டத்தை பாதித்துள்ளது என்று கூறப்படுகிறது.

முத்தரப்பு போட்டி
அண்மையில் நடந்து முடிந்த முத்தரப்பு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் டோணிக்கு என்று தனியாக பிரத்யேக முறையில் பந்துகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்
இந்திய அணி வெற்றி பெற்றால் ரசிகர்கள் கொண்டாடுவதும் தோற்றால் வீரர்களின் வீடுகளை தாக்குவதும் புதிது அல்ல. அப்படி இருக்கையில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது எளிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications