நெட் பயிற்சியின்போது டோணி காயம்!!: 'டோன்ட் வொரி'.. இன்று விளையாடுவார்!
பெர்த்: வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேப்டன் டோணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியா தோற்கடித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஐக்கிய அரபு அமீரக அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.

டோணி
வெள்ளிக்கிழமை இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரர் ஒருவர் வீசிய பந்து டோணியின் முழங்கையில் பட்டு காயம் ஏற்பட்டது.

ஐஸ் பேக்
பந்து பட்ட இடத்தில் டோணி உடனே ஐஸ் பேக் வைத்துவிட்டார் என்று அணியின் மீடியா மேனேஜர் டாக்டர் ஆர்.என். பாபா தெரிவித்தார்.

விளையாடுவார்
டோணி நலமாக உள்ளார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அமீரகத்திற்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷமி
பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications