Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனைவிகளுக்கும் தடை, காதலிகளுக்கும் தடை.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

மும்பை: உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களுடன் அவர்களது மனைவியரும், காதலிகளும் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடித் தடை விதித்து விட்டது. இதனால் வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம்.

குறிப்பாக விராத் கோஹ்லி இனிமேல் அரை சதம் அடிக்கும்போதும், சதம் போடும்போதும் பெவிலியனைப் பார்த்து காதலி அனுஷ்கா சர்மாவுக்கு பறக்கும் முத்தங்களைப் பறக்க விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவில் இந்த தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாம் இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிப்ரவரி 14ம் தேதி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஷரைக் குறைக்க மனைவிகளுக்கு அனுமதி

பிரஷரைக் குறைக்க மனைவிகளுக்கு அனுமதி

இந்திய அணியினர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது போட்டிகளால் ஏற்படும் நெருக்கடிகள், மன அழுத்தங்களைக் குறைக்க அவர்களுடன் மனைவியரையும் அழைத்துச் செல்ல வாரியம் அனுமதிப்பது வழக்கமானதுதான்.

முக்கியப் போட்டிகளுக்கு மட்டும் தடை

முக்கியப் போட்டிகளுக்கு மட்டும் தடை

அதேசமயம், உலகக் கோப்பை போட்டி போன்ற முக்கியத் தொடர்களுக்கு மட்டும் இதுபோல மனைவியரை அழைத்துச் செல்ல தடை விதித்து வருகிறது வாரியம்.

கவனக் குறைவும்.. கவனச் சிதைவும்

கவனக் குறைவும்.. கவனச் சிதைவும்

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த காலத்திலும் இதேபோலத்தான் வாரியம் நடந்துள்ளது. இது புதிதில்லை. உலகக் கோப்பைப் போட்டி போன்ற முக்கியத் தொடர்களின்போது, கிரிக்கெட் வீரர்களுக்கு கவனச் சிதைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் வாரியம் கவனமாக உள்ளது என்றார்.

வந்து பார்க்க வசதி

வந்து பார்க்க வசதி

இந்த முறையும் மனைவியரையும், காதலிகளையும் வீரர்களுடன் செல்ல வாரியம் தடை விதிக்கவுள்ளது. அதேசமயம், மனைவியர் மட்டும் தங்களது கணவர்மார்களை பார்த்துச் செல்ல ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், காதலிகளுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாதாம்.

கோஹ்லியால் வந்தது எல்லாம்!

கோஹ்லியால் வந்தது எல்லாம்!

உண்மையில் இந்தத் தடை உத்தரவை இப்போது ஸ்டிரிக்டாக வாரியம் கடைப்பிடிக்க முக்கியக் காரணமே கோஹ்லிதான் என்கிறார்கள். காரணம், கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரின்போது விராத் கோஹ்லி களத்தில் விளையாடியதை விட காதலி அனுஷ்கா சர்மாவுடன் ஊர் சுற்றியதே அதிகம். சரியாகவும் அவர் ஆடவில்லை. கேவலமாக ஆடி வந்தார். இதனால் அனைவரும் கோஹ்லி மீது பாய்ந்து குதறி விட்டனர்.

ஆஸ்திரேலியாவில் சமாளித்து விட்டார்

ஆஸ்திரேலியாவில் சமாளித்து விட்டார்

ஆனால் அதே கோஹ்லி, சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடினார். நான்கு டெஸ்ட் போட்டிகளில் 692 ரன்களைக் குவித்தார். இந்த முறையும் அனுஷ்கா ஆஸ்திரேலியாவில் தங்கி கோஹ்லியை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடர் முடிவில் மனைவியருக்கு மட்டும் சலுகை

டெஸ்ட் தொடர் முடிவில் மனைவியருக்கு மட்டும் சலுகை

டெஸ்ட் தொடரின் கடைசியில் வீரர்கள் தங்களது மனைவியருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட விதியை சற்று தளர்த்தி அனுமதி அளித்தது கிரிக்கெட் வாரியம். இதனால் ஷிகர் தவன், முரளி விஜய், சட்டேஸ்வர் புஜாரா, அஸ்வின், உமேஷ் யாதவ் மற்றும் கேப்டன் டோணி ஆகியோர் பலனடைந்தனர்.

ஆனால் உலகக் கோப்பையில் நோ பெர்மிஷன்

ஆனால் உலகக் கோப்பையில் நோ பெர்மிஷன்

இருப்பினும் உலகக் கோப்பைப் போட்டியின்போது மனைவியருக்கும் கூட அனுமதி கிடையாது என்ற கண்டிப்பான முடிவுக்கு வாரியம் வந்துள்ளதாம்.

Story first published: Sunday, January 18, 2015, 13:31 [IST]
Other articles published on Jan 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+