என்ன ஆட்டம், என்ன ஆட்டம்!!!: டோணி அணியை பார்த்து வியக்கும் கங்குலி
ஹாமில்டன்: உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் ஆட்டத்தை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் டோணி தலைமையிலான இந்திய அணியின் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆச்சரியம்
இந்திய அணியின் ஆட்டம் ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் இவ்வளவு சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

பந்துவீச்சாளர்கள்
இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டி அருமையாக விளையாடி வருகிறார்கள்.

ஷமி
ஷமி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுகிறார். உமேஷ் யாதவும் தனது வேகத்தை அதிகரித்துள்ளார்.

மோஹித்
மோஹித்தும் என்னை ஆச்சிரயப்பட வைத்துள்ளார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை மேம்படுத்தி அணியை சக்திவாயந்ததாக ஆக்கிவிட்டார்.

உலகக் கோப்பை
நம் வீரர்கள் விளையாடும் விதத்தை பார்க்கையில் அவர்கள் உலகக் கோப்பையை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார் கங்குலி.


Click it and Unblock the Notifications