Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

146 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த எமிரேட்ஸ் 195 ரன்களுக்கு சுருண்டதால், தென் ஆப்பிரிக்கா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-யு.ஏ.இ அணிகள், வெலிங்டனில் இன்று பலப் பரிட்சை நடத்தின.

World Cup 2015: South Africa post 341 against UAE

டாசில் வெற்றி பெற்ற யு.ஏ.இ, ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. ஹசிம் ஆம்லா 12 ரன்களிலும், டி காக் 26 ரன்களிலும் அவுட் ஆகியதால், தென் ஆப்பிரிக்கா பெரிய தொடக்கத்தை பெற முடியவில்லை.

இருப்பினும் ரில்லீ ரோச்சவ் 43 ரன்கள், டி வில்லியர்ஸ் 99 ரன்கள், டேவிட் மில்லர் 49 ரன்கள் குவித்து, அணியை மீட்டனர். 82 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டி வில்லியர்ஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உலக கோப்பை வரலாற்றில், ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட 3வது வீரர் டி வில்லியர்ஸ் ஆகும்.

இதனிடையே, இறுதி கட்டத்தில் ஃபர்கான் பெகார்டியன் 31 பந்துகளில் 64 ரன்கள் விளாசியதால், ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது.

அணியில் ஒருவரும் சதம் அடிக்காமலேயே, இவ்வளவு அதிக ரன்களை ஒரு அணி குவித்தது இதுதான் முதல் முறையாகும்.

இதையடுத்து பேட் செய்ய வந்த யு.ஏ.இ அணியிலும் தொடக்கத்தில் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்தபடியே இருந்தன. இருப்பினும் சைமான் அன்வரின் 39 ரன்கள் மற்றும் ஸ்வப்னில் பாட்டிலின் 57 ரன்கள் உதவியுடன் அந்த அணி ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரை எட்டியது. 47.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஏனெனில் பபகத் அலாஷ்மி காயம் காணமாக, களமிறங்க முடியவில்லை. இதையடுத்து 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி வாகை சூடியது.

தென் ஆப்பிரிக்க தரப்பில், மோர்கல், பிளேண்டர், டி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் மற்றும் இம்ரான் தாகிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை டி வில்லியர்ஸ் தட்டிச் சென்றார்.

Story first published: Thursday, March 12, 2015, 15:36 [IST]
Other articles published on Mar 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+