எவனா இருந்தாலும் வெட்டுவோம்.. சவாலுக்கு நாங்க ரெடி... "குரு" சாஸ்திரி வார்னிங்!
மெல்போர்ன்: இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு தென் ஆப்பிரிக்காவை, இந்தியா வென்றது அமைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 90,000 ரசிகர்களுக்கு மத்தியில் தென் ஆப்பிரிக்காவை ஓட ஓட விரட்டியடித்து இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இந்த வெற்றி கருதப்படுகிறது.
பாகிஸ்தானை வென்றதை விட தென் ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்திய அழகுதான், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என இந்தியா ஆல் ரவுண்ட் அட்டகாசத்தை மெல்போர்ன் மைதானத்தில் நிகழ்த்திக் காட்டியதை முன்னணி அணிகள் பயந்து போய் பார்த்தன.
இந்த வெற்றி குறித்து ரவி சாஸ்திரி பெருமிதம் கொண்டுள்ளார். "குரு சாஸ்திரி" என்று செல்லமாக அழைக்கப்படும் ரவி சாஸ்திரி இதுகுறித்துக் கூறியதாவது....

பெருமையாக இருக்கிறது
டோணியும், அவரது சகாக்களும் செய்துள்ள செயல் பெருமை தருகிறது. மிகச் சிறந்த தொழில்முறையிலான வெற்றி இது.

தப்புக் கணக்கு போடாதீங்க
இந்திய அணியைப் பற்றி யாரும் தப்புக் கணக்குப் போடக் கூடாது. அப்படிப் போட்டால் அது அவர்களுக்குத்தான் நஷ்டமாகப் போகும். மிகச் சிறந்த பேட்டிங், மிகச் சிறந்த பவுலிங்குடன் கூடியதாக இந்திய அணி விளங்குகிறது. இதை 2 வது முறையாக நிரூபித்துள்ளோம்.

எவனா இருந்தாலும் வெட்டுவோம்...!
எந்த அணியையும் சந்திக்கும் தெம்பு இந்திய அணிக்கு உள்ளது. எந்த சவாலுக்கும் இந்திய அணி தயார்.

அது போன மாசம்.. இது இந்த மாசம்
ஆஸ்திரேலியாவுடான டெஸ்ட் தொடர் செயல்பாடு குறித்து இப்போது பேசுவது பொருத்தமல்ல. இந்தியா எப்போதுமே மோசமான அணி அல்ல. நான்கு டெஸ்ட் போட்டிகள் என்பது அதிகபட்சம். எனவே வீரர்கள் சோர்வடைந்திருந்தனர். மன நிலையிலும் அவர்கள் சோர்வடைந்திருந்தனர். அவர்களுக்கு பிரேக் தேவைப்பட்டது.

அத விடு.. இதைப் பாரு!
முத்தரப்புத் தொடரில் இந்தியா வெல்லாதது முக்கியமல்ல. இப்போது நடக்கும் போட்டிகளை மட்டுமே பார்க்க வேண்டும்.

ஷிகர் அசத்தி விட்டார்
ஷிகர் தவானின் பார்ம் குறித்து பலரும் கேள்வி கேட்டனர். டெஸ்ட் போட்டியில் அவருக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை. ஆனால் தற்போது பிரமாதமான பார்முக்கு அவர் வந்து விட்டார். சிறப்பாக ஆடி வருகிறார் என்றார் சாஸ்திரி.


Click it and Unblock the Notifications