Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் மிச்சம் வைத்து எமிரேட்ஸை புரட்டிப் போட்ட வெஸ்ட் இண்டீஸ்.. காலிறுதிக்குத் தகுதி!

நேப்பியர்: ஜேசன் ஹோல்டரின் பிரமாதமான பந்து வீச்சு, கார்ட்டர், திணேஷ் ராம் தின், சார்லஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைகிறது.

இன்று நேப்பியரில் நடந்த இ்ப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். எமிரேட்ஸ் அணி முதலில் பேட் செய்து 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

World Cup 2015: West Indies Crush UAE by 6 Wickets to Virtually Enter Quarters

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் எமிரேட்ஸ் வீரர்கள் சுருண்டார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் பின்வரிசை வீரர்களால் அணி மீண்டு 175 ரன்களுக்கு வந்து சேர்ந்தது.

இந்த ஸ்கோரை பின்னர் 4 விக்கெட்களை இழந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி எட்டிப் பிடித்து வெற்றியைத் தட்டிச். சென்றது.

ஜான்சன் சார்லஸ் 55 ரன்கள் எடுத்தார். ஜோனதன் கார்ட்டர் 50 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டத்தின் 31வது ஓவரின் போது வெற்றி வெஸ்ட் இண்டீஸ் வசமானது.

இந்த வெற்றியின் மூலம் தற்போது பி பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இன்று பி பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதுகின்றனர். இதில் ஏதாவது அதிரடி, எதிர்பாராத மாற்றம் நடந்தால் புள்ளிகள் பட்டியலில் பாதிப்பு ஏற்படலாம்.

போட்டிக்குப் பின்னர் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேசுகையில், நாங்கள் திட்டமிட்டு ஆடினோம். அதே போல வென்றோம். இந்தப் போட்டியை வெல்வது மட்டுமல்லாமல், போட்டியை 36 ஓவர்களுக்குள் முடிக்கவும் வேண்டியிருந்தது. அதை நாங்கள் செய்து வி்ட்டோம் என்றார் ஹோல்டர்.

முன்னதாக எமிரேட்ஸ் அணியிலும் சில சந்தோஷங்கள் காணப்பட்டன. அந்த அணியின் அம்ஜத் ஜாவேத் 56 ரன்களையும், நசீர் அஜீஸ் 60 ரன்களையும் குவித்தார். 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 107 ரன்களைக் குவித்தனர்.

எமிரேட்ஸ் பேட்டிங் ஆர்டரை ஹோல்டரும், ஜெரோம் டெய்லரும் இணைந்து சீர்குலைத்தனர். ஹோல்டர் 4 விக்கெட்களையும், டெய்லர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை.

காலிறுதிக்குள் நுழைந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி மார்ச் 21ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதும்.

Story first published: Sunday, March 15, 2015, 11:21 [IST]
Other articles published on Mar 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+