நியூசிலாந்தில் இந்திய ரசிகரை பிரச்சனையில் இருந்து காத்த 'கடவுளின் கடிதம்'
ஆக்லேண்ட்: நியூசிலாந்தின் ஆல்லேண்ட் விமான நிலையத்தில் பெயிண்ட் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம் பிரச்சனையில் சிக்கிக் கொண்டார். அப்போது அவரை காப்பாற்றியது சச்சின் அளித்த கடிதம் தான்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம். அவர் உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண ஆஸ்திரேலியா சென்றார். இந்திய அணி விளையாடிய முதல் 4 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற்றது.
அந்த 4 போட்டிகளிலும் உடல் முழுவதும் மூவர்ணத்தை பூசி, முடியை இந்திய வரைபடம் போல் நறுக்கி, தலையில் குட்டி உலகக் கோப்பையுடன் காட்சி தந்தாரே அவர் தான் சுதிர்.

நியூசிலாந்து
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதி வரும் ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

விமான நிலையம்
இந்தியாவின் ஆட்டத்தை காண சுதிர் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தில் உள்ள ஆக்லேண்ட் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

பெயிண்ட் பாட்டில்கள்
விமான நிலையத்தில் சுதிரை சோதனை செய்த அதிகாரிகள் அவர் வைத்திருந்த ஏராளமான பெயிண்ட் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பழங்கள், உணவு பொருட்கள், திரவங்களை நியூசிலாந்திற்குள் கொண்டு வர அனுமதி கிடையாது என்பது சுதிருக்கு தெரியாது.

அபராதம்
அளவுக்கதிமாக பெயிண்ட் பாட்டில்களை கொண்டு வந்ததற்காக சுதிருக்கு ரூ.65,000 அபராதம் விதிக்கப்பட்டது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், தான் இந்திய அணியின் ரசிகர் என்றும், அவர்களை ஊக்குவிக்க உடல் முழுவதும் பெயிண்ட் அடித்துக் கொள்வதாகவும் சுதிர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அவரது விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை.

சச்சினின் கடிதம்
சுதிர் உடனே தான் வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர் எழுதிக் கொடுத்த கடித்ததை அதிகாரிகளிடம் காட்டினார். அதைப்பார்த்த அதிகாரிகள் அபராத தொகையை வாங்காமலேயே சுதிரை விட்டுவிட்டனர்.

சச்சின்
உலகக் கோப்பை போட்டியை காண சுதிருக்கு ஒரு நாளைக்குள் விசா வழங்குமாறு சச்சின் டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு எழுதிக் கொடுத்த கடித்ததை பார்த்து தான் நியூசிலாந்து அதிகாரிகள் அமைதியாகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications