For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம டைமிங்கில்.. பரம எதிரி இங்கிலாந்தை கலாய்த்த கில்கிறிஸ்ட்! அப்படி என்னப்பா சொன்னாரு?

சிட்னி : 2019 உலகக்கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய அணியும் மாறியுள்ளது.

அது குறித்து கில்கிறிஸ்ட் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, தானாகவே அமைந்த டைமிங்கில், தங்கள் நாட்டின் பரம எதிரி அணியான இங்கிலாந்தை அவர் கலாய்த்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

கேள்வி

கேள்வி

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டிடம் எந்த அணி உலகக்கோப்பை தொடரை வெல்லும் என கேள்வி எழுப்பினர் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள். அதற்கு வழக்கம் போல, ஆஸ்திரேலிய அணி தான் வெல்லும் எனக் கூறி, அதற்கான காரணத்தை கூறி வந்தார் கில்கிறிஸ்ட்.

நம்பிக்கை

நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில், ஒருநாள் தொடரை வென்றதை பற்றிக் கூறி, ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் உள்ளது என அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது, பின்னணியில் பெரும் சப்தம் எழுந்தது.

இரைச்சல்

இரைச்சல்

கில்கிறிஸ்ட் நின்றிருந்த மைதானத்தில் ஏதோ ஒரு இடத்தை தகர்க்கும் சப்தம் தான் அப்படி பெரும் இரைச்சலாக கேட்டது. அப்போது அந்த இரைச்சலை வைத்து இங்கிலாந்தை கலாய்த்தார் கில்கிறிஸ்ட். அப்படி என்ன சொன்னார்?

டைமிங்

அந்த இடிபாடுகளின் இரைச்சலை காட்டி, இது அரையிறுதியில் இங்கிலாந்தை, ஆஸ்திரேலியா தகர்த்தது என்று கூறி தங்கள் பரம எதிரியை சரியான டைமிங்கில் கலாய்த்தார். அதைக் கேட்டு செய்தியாளர்கள் சிரித்தனர். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து நாடுகள் கிரிக்கெட்டை பொறுத்தவரை பெரும் பகையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஆதிக்கம்

இங்கிலாந்து ஆதிக்கம்

ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளைக் காட்டிலும் இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணில் ஆடுகிறது என்பதோடு, சிறப்பான அணியை கைவசம் வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அந்த அணி தான் உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் முதல் இடத்தில் இருக்கிறது.

Story first published: Wednesday, May 22, 2019, 15:32 [IST]
Other articles published on May 22, 2019
English summary
World cup 2019 : Adam Gilchrist timingly make fun of England at World Cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+