Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை உட்பட.. அனைத்து அணிகளில் இருந்தும் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்.. இங்கிலாந்து அதிரடி!!

லண்டன் : சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ்-ஐ உலகக்கோப்பை அணி உட்பட அனைத்து இங்கிலாந்து அணிகளில் இருந்தும் நீக்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் பெயர் இடம் பெற்று இருந்தது. எனினும், அதற்குள் அவரை நீக்கி அதிரடி காட்டியுள்ளது இங்கிலாந்து. நீக்கத்துக்கு காரணம் என்ன?

தடை

தடை

அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த சில நாட்கள் முன்பு ஊக்கமருந்து சோதனையில் சிக்கி, 21 நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில் இருந்து தடை செய்யப்பட்டார். அவர் ஆடி வந்த ராயல் லண்டன் கோப்பை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார்.

விமர்சனம்

விமர்சனம்

இரண்டாவது முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் ஊக்கமருந்து கொள்கைக்கு புறம்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் சிக்கியுள்ளார். எனவே, இந்த விவகாரம், அவர் மீது கரும்புள்ளியாக மாறியது. உலகக்கோப்பை அணியிலும் அவர் பெயர் இடம் பெற்று இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

வேறு வழியின்றி நீக்கம்

வேறு வழியின்றி நீக்கம்

இந்த நிலையில், வேறு வழியின்றி, உலகக்கோப்பை சமயத்தில் சர்ச்சைகளை தடுக்கவும், இவர் ஒருவர் மீதான விமர்சனத்தால் முழு அணியும் பாதிப்படைந்து விடக் கூடாது எனக் கருதியும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உலகக்கோப்பைக்கு முன் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடர்கள் மற்றும் உலகக்கோப்பை உத்தேச அணி ஆகியவற்றில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் பெயரை நீக்கியுள்ளது.

இதற்கு முன்..

இதற்கு முன்..

இந்த விவகாரம் மட்டுமின்றி, கடந்த 2017இல் சக வீரர் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து பிரிஸ்டல் நகரில் தெருச் சண்டையில் ஈடுபட்டு, தடை பெற்று இருந்தார். அதில் இருந்து சில மாதங்கள் முன்பு தான் மீண்டார் அலெக்ஸ் ஹேல்ஸ். அதற்குள் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்.

Story first published: Monday, April 29, 2019, 15:31 [IST]
Other articles published on Apr 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+