Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம இந்திய பௌலர் தான் டாப்.. பிரெட் லீ-யின் டாப் 3இல் இடம் பிடித்த அந்த வீரர் யாருப்பா?

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் புயல் பிரெட் லீ இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படப் போகும் டாப் 3 வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தார்.

அதில் நம் இந்திய வேகப் பந்துவீச்சாளர்தான் டாப்'பில் இருக்கிறார். அவருடன் தன் நாட்டை விட்டுக் கொடுக்காமல் இரண்டு ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களையும் தன் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

World cup 2019 : Brett Lee named Bumrah as one of his top three bowlers in world cup

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் பிரெட் லீ-யின் லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்துள்ளார். அவர் குறித்து குறிப்பிடுகையில் "என்ன மாதிரி அருமையான பந்துவீச்சாளர்" என கூறினார் பிரெட் லீ.

"அவரிடம் நல்ல சாதனைகள் உள்ளன. அருமையான யார்க்கர் உள்ளது. நல்ல வேகம் உள்ளது" என்று பும்ரா குறித்து குறிப்பிட்டார். பும்ரா தவிர்த்து ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரை குறிப்பிட்டார்.

பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தில் இருக்கிறார். இதுவரை வெறும் 49 போட்டிகளே ஆடியுள்ள பும்ரா 85 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பும்ராவின் யார்க்கர் பந்துகளை சந்திக்க பெரிய பேட்ஸ்மேன்கள் கூட திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பும்ரா தான் பந்துவீச்சில் தூணாக இருக்கப் போகிறார் என பலரும் கணித்துள்ளனர். பிரெட் லீயும் அதையே தான் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 23, 2019, 19:31 [IST]
Other articles published on May 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+