பும்ரா பௌலிங்கை புரிஞ்சுகிட்ட எந்த பேட்ஸ்மேனையும் நான் பார்த்ததே இல்லை!!
மும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் வேகப் பந்துவீச்சாளர்களில் மிகச் சிலர் குறித்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதில் ஒருவர் நம் இந்திய அணியின் பும்ரா. ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பும்ரா எந்த வகையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்பது குறித்து அருமையான விளக்கம் அளித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜெப் தாம்சன்.

தனித்துவம்
பும்ராவின் பந்துவீச்சு மற்ற எந்த வேகப் பந்துவீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமானது. பெரும்பாலும் யார்க்கர் பந்துகளை வீசினாலும், பேட்ஸ்மேன்களால் இவரது பந்துவீச்சை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் தான் குறிப்பிட்டு பேசியுள்ளார் தாம்சன்.

எதிரணியை எரித்து விடும்
கடந்த 70களில் ஆஸ்திரேலிய அணியில் டென்னிஸ் லில்லியுடன் இணைந்து வேகப் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெப் தாம்சன், கூறுகையில், பும்ராவின் வேகம் எதிரணியை எரித்து விடும் அளவுக்கு இருந்தாலும், அவர் அதை கலந்து கட்டி அடிக்கிறார் என்றார்.

மரபுக்கு மாறான பந்துவீச்சு
மேலும், அவர் பந்துவீச்சை புரிந்து கொள்வது கடினம். பேட்ஸ்மேன்கள் அவரை புரிந்து கொண்டு நான் பார்த்ததே இல்லை. அவர் மரபுக்கு மாறாக பந்து வீசி வருகிறார். அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது என்கிறார் தாம்சன்.

இந்த இரண்டு வீரர்கள்
2019 உலகக்கோப்பை தொடரில் வேகப் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் பும்ரா, தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா ஆகிய வீரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்கிறார் தாம்சன். வேகப் பந்துவீச்சில் இந்திய அணி பும்ராவை நம்பித்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications