Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி குறித்து வாய் நிறைய புகழ்ந்த “விசுவாச” விராட் கோலி.. என்ன சொன்னார் தெரியுமா?

Recommended Video

Kohli about Dhoni: தோனி குறித்து புகழ்ந்த கோலி, என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ

பெங்களூர் : 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேப்டன் விராட் கோலி தான் அளித்த பேட்டியில் தோனி குறித்தும், இந்திய அணியின் திட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தோனி பற்றி கோலி பேசும் போது, ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் புகழ்ந்து தள்ளினார். விசுவாசம் குறித்தெல்லாம் கோலி பேசியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

விசுவாசம்

விசுவாசம்

இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கேப்டன் விராட் கோலி, "பலரும் தோனி குறித்து விமர்சித்து வருகிறார்கள். ஆனால். எனக்கு விசுவாசம் தான் முக்கியம்" என்று வெளிப்படையாகவே கூறினார்.

ஆதரவு

ஆதரவு

"நான் அணியில் நுழைந்த போது, சில போட்டிகளுக்கு பின் வேறு சிலருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கக் கூடிய சூழல் இருந்தது. ஆனால், தோனி எனக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் நான் என் வாய்ப்பை பிடித்துக் கொண்டேன். அவர் அளித்த ஆதரவு மிகவும் முக்கியம்" என தோனி தனக்கு உதவியது குறித்து மனமார பேசினார் கோலி.

வாய்ப்பு

வாய்ப்பு

தனக்கு பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் களமிறங்க வாய்ப்பு அளித்தது குறித்தும் பேசிய கோலி, பலரும் இளம் வீரர்களுக்கு மூன்றாம் இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை வழங்கமாட்டார்கள் என கூறினார்.

ஆலோசனை

ஆலோசனை

மேலும், பீல்டிங் நிறுத்துவது, பந்துவீச்சில் மாற்றம் செய்வது, ஆகியவற்றில் தோனியிடம் ஆலோசனை பெறுவது குறித்தும் பேசினார் கோலி. மேலும், தோனி முதல் பந்தில் இருந்து 300வது பந்து வரை போட்டியை புரிந்து கொள்வார். அவர் ஸ்டம்ப்புகளுக்கு பின் இருப்பது அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன் என புகழ்ந்து தள்ளினார் கோலி.

வெளிப்படை

வெளிப்படை

விராட் கோலி - தோனி இடையே ஒரு நட்புணர்வு, புரிதல் இருப்பது பலரும் அறிந்த ஒன்று என்றாலும், கேப்டனாக இருக்கும் கோலி அதை இத்தனை வெளிப்படையாக பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, April 19, 2019, 15:56 [IST]
Other articles published on Apr 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+