Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோடிஜி.. வாழ்த்துக்கள்ஜி.. இந்தியா எங்கேயோ போகப் போகுது.. வாழ்த்து சொல்லி சல்யூட் செய்த கேப்டன்!!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் ஆட தன்னை தயார் செய்து வருகிறது.

அந்த "பிசி"யான நிலையிலும், இந்திய அணியின் கேப்டன் கோலி, மறக்காமல், தேர்தலில் வென்ற பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

World cup 2019 : Captain Virat Kohli wishes PM Narendra Modi on his election victory

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மோடி தலைமையில் இயங்கும் ஆளும் பாரதிய ஜனதா அரசு பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

வெற்றி பெற்ற மோடிக்கு கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்து போட்ட ட்விட்டர் பதிவில், "வாழ்த்துக்கள் நரேந்திர மோடிஜி! உங்கள் பார்வையில் இந்தியா புதிய உயரங்களை தொடும் என நம்புகிறோம்" எனக் கூறி கடைசியாக "ஜெய் ஹிந்த்" என சல்யூட் அடித்திருந்தார்.

https://twitter.com/imVkohli/status/1131823451755425792

விராட் கோலி தவிர, சச்சின் டெண்டுல்கர், சேவாக், அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஷிகர் தவான் என பல கிரிக்கெட் பிரபலங்களும் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

Story first published: Friday, May 24, 2019, 17:55 [IST]
Other articles published on May 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+