நான் “டேஞ்சர்” பேட்ஸ்மேன்.. என்னைப் பார்த்து பயப்படுவாங்க.. ஆனா கேமரா முன்னாடி சொல்ல மாட்டாங்க!!
நான் "டேஞ்சர்" பேட்ஸ்மேன்.. என்னைப் பார்த்து பயப்படுவாங்க.. ஆனா கேமரா முன்னாடி சொல்ல மாட்டாங்க!!
லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தான் ஒரு "டேஞ்சரான" பேட்ஸ்மேன் என இளம் வீரர்களுக்கு நன்கு தெரியும் என செம கெத்தாக பேட்டி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்துக்கு பேட்டி அளித்த போது கிறிஸ் கெயில் மிக வெளிப்படையாக பல விஷயங்களையும் பேசினார்.

டேஞ்சர்
அப்போது, இளம் வீரர்கள் இந்த "யுனிவர்ஸ் பாஸ்" என்ன செய்வார் என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்கள் மனதில், "இவர் தான் கிரிக்கெட்டில் தாங்கள் பார்த்ததிலேயே டேஞ்சரான பேட்ஸ்மேன்" என ஓடிக் கொண்டிருக்கும் என கூறியுள்ளார்.

கேமரா முன்..
மேலும், எதிரணி வீரர்கள் யாரும் தன்னைப் பார்த்து பயப்படுவதை கேமரா முன் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், கேமராவுக்கு பின்னால் கேட்டால் அவர்கள், "இவர்தான், இவர்தான்" என தங்கள் பயத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் கெத்தாக கூறியுள்ளார்.

வெளிப்படையான பேச்சு
கிறிஸ் கெயில் எப்போதுமே வெளிப்படையான, ஜாலியான ஒரு வீரர். அதற்காக இப்படி "வெளிப்படையாக" பேசுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கிறிஸ் கெயில் தான் கிரிக்கெட் உலகில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்பது உண்மைதான். அதற்காக இப்படியா?

தில் இருக்கு
2019 உலகக்கோப்பை தொடர்தான் கிறிஸ் கெயிலுக்கு கடைசி உலகக்கோப்பை. இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார் கெயில். இந்த நிலையிலும் கெத்தாக பேச ஒரு தில் வேண்டும்.


Click it and Unblock the Notifications