Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சு.. முதல் 2 போட்டி போச்சு.. பரிதாப டேல் ஸ்டெய்ன்.. ஆப்பு வைச்ச ஐபிஎல்!!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் முக்கியமான தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என செய்தி வெளியாகி உள்ளது.

உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 முதல் துவங்க உள்ளது. முதல் போட்டியில், தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும், வலுவான அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்க அணியும் மோத உள்ளன.

World cup 2019 : Dale Steyn to miss first match against England

மிகவும் முக்கியமான இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பங்கேற்க மாட்டார் என தென்னாப்பிரிக்கா அணி அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் 2 அன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் ஸ்டெய்ன் விளையாட மாட்டார். ஜூன் 5 அன்று இந்திய அணிக்கு எதிரான போட்டிக்குள் அவர் தயாராகி விடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கிப்சன் தெரிவித்தார்.

ஸ்டெய்ன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடரின் பாதியில் ஆடினார். வெறும் 2 போட்டிகள் மட்டுமே ஆடிய நிலையில், காயம் காரணமாக மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பினார்.

அப்போது முதல் காயத்தில் இருக்கும் ஸ்டெய்ன், உலகக்கோப்பை தொடரில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார். ஐபிஎல் காரணமாக வாய்ப்பை இழக்கிறார் இந்த முன்னணி வேகப் பந்துவீச்சாளர்.

Story first published: Tuesday, May 28, 2019, 19:46 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+