Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்பவும் தல தோனிதாங்க இந்திய அணிக்கு கேப்டன்.. போட்டு உடைத்த சுரேஷ் ரெய்னா.. அப்ப கோலி இல்லையா?!

மும்பை : தோனி அதிகாரப்பூர்வமாக கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர்தான் இப்போதும் கேப்டன் என நெத்தியடியாக அடித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

தோனி கடந்த 2017இல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பதவியை துறந்தார். ஆக்ரோஷ வீரர் விராட் கோலி டெஸ்ட் அணியுடன் சேர்த்து, டி20, ஒருநாள் அணிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

கேப்டன்சி விமர்சனங்கள்

கேப்டன்சி விமர்சனங்கள்

அப்போது முதல் விராட் கோலி வெற்றிகள் பெற்றாலும் கூட கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் நிற்காமல் வந்து கொண்டே இருக்கின்றன. சிலர் தோனி இல்லாமல், விராட் கோலி இத்தனை வெற்றிகள் பெற்று இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

கோலிக்கு கேப்டன் தோனி

கோலிக்கு கேப்டன் தோனி

தோனி இருப்பது கேப்டன் விராட் கோலிக்கு உதவியாக இருக்கும் என்றுதான் பலரும் கருத்து கூறி வந்துள்ளனர். ஆனால், அதற்கும் ஒருபடி மேலே சென்று, "தோனி தான் விராட் கோலிக்கு கேப்டன்" என கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

இப்பவும் அதே வேலை

இப்பவும் அதே வேலை

சுரேஷ் ரெய்னா கூறுகையில், "அதிகாரப்பூர்வமாக தோனி கேப்டன் இல்லை. ஆனால், களத்தில் அவர்தான் விராட் கோலிக்கு கேப்டன். அவரது வேலை இப்போதும் அதேதான். பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்ப்புகளுக்கு பின்னே இருந்து ஆலோசனை கூறுகிறார். பீல்டிங் நிறுத்தம் செய்கிறார்" என்றார்.

ரெய்னா பேச்சு

ரெய்னா பேச்சு

இதே பேட்டியில் விராட் கோலி பற்றி நல்லவிதமாக கூறினாலும், இப்படி "பொசுக்குன்னு" தோனி தான் இப்பவும் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா கூறியது இந்திய கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தோனியுடன் நெருக்கம்

தோனியுடன் நெருக்கம்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனி கேப்டனாக இருக்க, சின்ன தல என்ற அடைமொழியுடன் துணை கேப்டனாக இருந்து வருகிறார் சுரேஷ் ரெய்னா. தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த காலத்திலும், ரெய்னா அவருடன் நெருக்கமாக இருந்து வந்தார்.

தடுமாறிய வாய்ப்பு

தடுமாறிய வாய்ப்பு

அப்போது ரெய்னா பார்ம் இழந்ததால், ஒருநாள் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், டி20 போட்டிகளில் தேர்வாளர்கள் அவரை மறந்துவிடவில்லை. விராட் கோலி கேப்டனான பின், ரெய்னா டி20 போட்டிகளிலும் வருவதும், போவதுமாக இருந்தார்.

ரெய்னா போட்ட லைக்

ரெய்னா போட்ட லைக்

2018இல் இங்கிலாந்து அணியுடனான டி20 தொடருக்குப் பின் ரெய்னாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ரசிகர் ஒருவர் அணியில் இருக்கும் அரசியலால் தான் ரெய்னாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என ட்விட்டரில் கூறி இருந்த பதிவிற்கு "லைக்" போட்டார் ரெய்னா. ஏதோ ஒண்ணு இருக்கு!

Story first published: Tuesday, May 28, 2019, 12:53 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+