Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்!!

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி செல்லும், கோப்பை வெல்லும் என பல நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் கூறி வருகின்றனர்.

ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் பும்ராதான் இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள் என பலரும் கோலி - பும்ரா புராணம் பாடி வருகின்றனர். ஆனால், உண்மை என்ன?

தோனியால் தான் முடியும்

தோனியால் தான் முடியும்

தற்போதுள்ள சூழ்நிலைப்படி, இந்தியா உலகக்கோப்பை வென்றால் அதற்கு அனுபவம் கொண்ட மூத்த வீரர் தோனிதான் முக்கிய காரணமாக இருப்பார். விராட் கோலி, பும்ராவை காட்டிலும், தோனியால் மட்டும் தான் மீண்டும் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க முடியும். எப்படி தெரியுமா?

ஐபிஎல்-லை பார்த்தால் புரியும்

ஐபிஎல்-லை பார்த்தால் புரியும்

இது எப்படி என புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் இவர்களின் செயல்பாடுகளை நாம் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட முறையில் விராட் கோலி, பும்ரா, தோனி மூவருமே சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இவர்களில் யார் தனியாளாக வெற்றி தேடிக் கொடுத்தது என்பதை பார்த்தாலே பாதி விஷயம் புரிந்து விடும்.

என்ன செய்தார்கள்?

என்ன செய்தார்கள்?

விராட் கோலி போட்டிக்குப் போட்டி நன்றாக ஆடியும் பெங்களூர் அணியால் தொடர் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. அதே போல, பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினாலும், அவருடன் மலிங்கா, ராகுல் சாஹர், ஹர்திக் பண்டியா போன்ற திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருந்தனர். அவர் தனி ஆவர்த்தனம் செய்யவில்லை.

தனியாளாக ஆதிக்கம்

தனியாளாக ஆதிக்கம்

ஐபிஎல் தொடரில் தங்கள் அணிகளுக்கு ஒரீரு போட்டிகளில் கோலியும், பும்ராவும் தனியாக தங்கள் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். ஆனால், மறுபுறம் தோனி ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் அல்லது கேப்டன்சி என ஏதோ ஒரு வகையில் தனியாளாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

தோனி இல்லாத போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுத்தமாக பலவீனமான அணியாக காட்சி அளித்தது. இந்திய அணி நிலைமை அப்படி இல்லை என்றாலும், தோனி களத்தில் நின்றால், கேப்டன் கோலி, சுழற் பந்துவீச்சாளர்கள், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் ஒருவித நம்பிக்கை பெறுவார்கள். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

அணியை ஒருங்கிணைப்பார்

அணியை ஒருங்கிணைப்பார்

உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த, வெற்றிகளை குவிக்க, கோப்பையை கைப்பற்ற ஒவ்வொரு போட்டியில் ஒவ்வொரு வீரர் காரணமாக இருந்தாலும், எல்லா போட்டிகளிலும் தோனிதான் அணியைக் கட்டி, ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

சிறந்த விக்கெட் கீப்பர்

சிறந்த விக்கெட் கீப்பர்

தோனி வெறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமல்ல. தோனி போன்ற ஒரு விக்கெட் கீப்பர் தற்போது எந்த அணியிலும் இல்லை. இது உலகக்கோப்பையில் இந்திய அணியை எப்போதும் ஒருபடி மேலேயே வைத்திருக்கும்.

காலை தூக்க முடியாது

காலை தூக்க முடியாது

தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது, எதிரணி பேட்ஸ்மேன்கள் அரை நொடி கூட தங்கள் கால்களை கிரீஸில் இருந்து தூக்காமல் இருக்க தனி பயிற்சி செய்ய வேண்டும் அல்லது கிரீஸை விட்டு முன்னேறி அதிரடியாக ஆடாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், ஸ்டம்பிங் தான்!

பேட்டிங்கில் செம பார்ம்

பேட்டிங்கில் செம பார்ம்

அதே போல தோனி பேட்டிங்கில் செம பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும், அதற்கு முன்பும் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். பல போட்டிகளில் நாட்-அவுட்டாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரணம் யார்?

காரணம் யார்?

விராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளின் வெற்றியில் முக்கிய நபராக பங்கேற்பார்கள். ஆனால், தோனி ஒவ்வொரு முறையும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.

தோனி என்றால் வெற்றி

தோனி என்றால் வெற்றி

சில சமயம், தோனியின் பங்கேற்பு ஸ்கோர்போர்டில் தெரியும். சில முறை, மறைமுகமாக மற்ற வீரர்களின் வெற்றிக்கு பின்னால் இருப்பார். எப்படி பார்த்தாலும், தோனியை வெறும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்று மட்டுமே நாம் கருத முடியாது. அவருக்கு எப்படி வெற்றிகளை பெற வேண்டும் என்பது தெரியும்.

Story first published: Wednesday, May 22, 2019, 10:30 [IST]
Other articles published on May 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+