Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு காயம்னா.. நான் தான் பேன்ட்-எய்ட்! தெளிவா சொன்ன தினேஷ் கார்த்திக்!!

Recommended Video

தோனிக்கு காயம்னா, நான் முதலுதவி: தினேஷ் கார்த்திக் கருத்து !!

கொல்கத்தா : இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், தோனியை தாண்டி போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து பேசியுள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணி ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக் - பண்ட் போட்டி

தினேஷ் கார்த்திக் - பண்ட் போட்டி

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். இவர்கள் இருவருமே தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்ற இடத்திற்குத் தான் போட்டி போட்டனர்.

நான் முதலுதவிப் பெட்டி

நான் முதலுதவிப் பெட்டி

உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தாலும், தோனி இருக்கும் போது தினேஷ் கார்த்திக்குக்கு போட்டிகளில் 11 வீரர்களில் ஒருவராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்குமா? இது குறித்து பேசிய தினேஷ், "நான் அணியில் ஒரு முதலுதவிப் பெட்டி மாதிரி தான் பயணிக்கப் போகிறேன். தோனிக்கு காயம் ஏற்பட்டால், அந்த நாளுக்கு மட்டும் நான் பேன்ட்-எய்ட் ஆக இருப்பேன்" என்றார்.

நம்பிக்கை

நம்பிக்கை

எனினும், உலகக்கோப்பை தொடரில் தனக்கு நான்காவது வரிசையில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அல்லது பினிஷர் வாய்ப்பு போன்றவை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

தெளிவான திட்டம்

தெளிவான திட்டம்

உண்மையில், தினேஷ் கார்த்திக் இந்திய உத்தேச அணியில் வாய்ப்பு பெற்றதை பலரும் பாராட்டி வரும் வேளையில், அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து பலரும் மறந்துவிட்டனர். ஆனால், தினேஷ் கார்த்திக் அணியில் தன் நிலை குறித்து தெளிவான திட்டத்தோடு தான் இருக்கிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இரண்டு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு பெறாத தினேஷ், 12 ஆண்டுகளுக்குப் பின் 2019 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். அவர் நிச்சயம் பல போட்டிகளில் களமிறங்கி அணியை வெற்றி பெற வைப்பார் என நம்புவோம்.

Story first published: Wednesday, April 17, 2019, 10:59 [IST]
Other articles published on Apr 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+