For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிங்குச்சா.. ஜிங்குச்சான்னு.. என்னங்க இது.. பயங்கரமா யோசிச்சு காமெடி செய்த இங்கிலாந்து!!

லண்டன் : இந்த முறை உலகக்கோப்பை தொடரை நடத்த உள்ள இங்கிலாந்து நாடு, தன் அணிக்காக வடிவமைத்துள்ள புதிய ஆடைக்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு கிடைக்கவில்லை.

இங்கிலாந்து அணி இந்த முறை உலகக்கோப்பை வென்றே தீருவோம் என்ற முனைப்பில் உள்ளது. இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லாத இங்கிலாந்து அணிக்கு இந்த முறைதான் அதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.

World cup 2019 : England Jersey for World cup inspired from 1992 not looking good

பலமான அணி, ஒருநாள் போட்டிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதிக்கம், சொந்த மண்ணில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடர் என எல்லாமே அந்த அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

நான் நான் "டேஞ்சர்" பேட்ஸ்மேன்.. என்னைப் பார்த்து பயப்படுவாங்க.. ஆனா கேமரா முன்னாடி சொல்ல மாட்டாங்க!!

எப்படியும் உலகக்கோப்பை வெல்வோம் என்ற திட்டத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, ஆடை விஷயத்தில் செம காமெடி செய்துள்ளது. 1992இல் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசியாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சம் பெற்ற வெற்றி அதுதான். அதனால், அப்போது இங்கிலாந்து அணி பயன்படுத்திய நீல நிற ஆடையை மாதிரியாக வைத்து, புதிய ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது என கேட்டது இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு.

ஆனால், ரசிகர்கள் புதிய நீல நிற ஆடை மோசமாக இருப்பதாகவும், இந்திய அணியின் ஆடை போல இருப்பதாகவும் கூறி வருகின்றனர். சிலர் இந்தியா - இங்கிலாந்து போட்டியின் போது பயங்கர குழப்பமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

புதிய ஆடையில் என்ன பிரச்சனை என்று பார்த்தால், அதன் நீல நிறம் கண்ணைப் பறிக்கும் வகையில் உள்ளது. நமக்கு புரிவது போல சொல்ல வேண்டும் என்றால், "ஜிங்குச்சா.. ஜிங்குச்சா.. நீல கலர்.. ஜிங்குச்சா" என்பது போல உள்ளது. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, May 22, 2019, 18:16 [IST]
Other articles published on May 22, 2019
English summary
World cup 2019 : England Jersey for World cup inspired from 1992 not looking good
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X