Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பைக்கு ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யாமல்.. தவறு செய்து விட்டதா தேர்வுக்குழு?

சென்னை : உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் இடம்பெற உள்ளன.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் என மொத்தம் 12 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. கோலி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார். தோனி 4வது முறையாக உலகக்கோப்பையில் களம் காண்கிறார். தோனி விக்கெட் கீப்பராக விளையாட உள்ள நிலையில் 2 வது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ரிஷப் பண்ட் தேவை

ரிஷப் பண்ட் தேவை

இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் தேவை என்ற எண்ணம் ரசிகர்களிடையே மட்டும் அல்லாமல் தேர்வுகுழுவினரிடமும் இருந்துள்ளது. அவரை 2வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் தேர்வு செய்யவில்லை என்றாலும் அவரை 4வது வரிசை பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருக்கலாம் என்பதே பலரது எண்ணம். ஏனெனில் இந்திய அணியை பொறுத்தளவில் 4வது வரிசைக்கு ரிஷப் பண்ட் போன்ற இளம் அதிரடி வீரர் தேவை என்ற நிலையே உள்ளது.

கவாஸ்கர் அதிர்ச்சி

கவாஸ்கர் அதிர்ச்சி

இந்த காரணங்கள் மட்டுமல்லாது ஆட்டத்தின் கடைசி ஓவரான டெத் ஓவர் என்று அழைக்கப்படும் இறுதி நிமிடங்களில் மிகத் திறமையாக விளையாடக் கூடியவர் ரிஷப் பண்ட் என்ற கருத்தும் உள்ளது. எதிர்காலத்திலும் ரிஷப் - பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் இந்திய அணிக்கு தேவை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் ரி‌ஷப் பண்ட்டை தேர்வு செய்யாதது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்து உள்ளார். இவரைப் போலவே பலரும் ரிஷப் பண்ட்-ஐ உலக கோப்பைக்கு தேர்வு செய்யாமல் விட்டது தேர்வுக் குழுவின் மிகப்பெரிய தவறு என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்வு குழு விளக்கம்

தேர்வு குழு விளக்கம்

அதே வேளையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை ஏன் தேர்வு செய்தோம் என்று தேர்வு குழுவின் தலைவர் எம்.எஸ்.கே., பிரசாத் கூறுகையில் ரிஷப் பண்ட் திறமையான வீரர் அதில் மாற்றுக் கருத்து இல்லை அதே வேளையில் அவருக்கு இன்னும் நேரம் உள்ளது. அவர் தற்போதைய உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இல்லாதது துரதிருஷ்டவசமானது. அதே நேரம் நெருக்கடியான நேரத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பான செயல்படுவதை பார்க்க முடிந்தது. அதனால் அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம்.' என்று கூறியுள்ளார்

Story first published: Wednesday, April 17, 2019, 18:09 [IST]
Other articles published on Apr 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+