Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையில் விஜய் ஷங்கருக்கு “பெப்பே”.. “கேம்” ஆடும் கோலி.. எல்லாம் அந்த ஒருவருக்காக!!

மும்பை : 2019 ஐபிஎல் தொடர் முடிவுக்கு வர உள்ளது. அதை அடுத்து மே 30 முதல் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் எந்த வீரர் நான்காவது வரிசையில் களமிறங்குவார் என்பது குறித்த விவாதம் இன்னும் ஓயவில்லை.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நான்காவது வரிசையில் களமிறங்க விஜய் ஷங்கரை தேர்வு செய்துள்ளதாக தேர்வுக் குழு அறிவித்தது. ஆனால், ரசிகர்கள் விஜய் ஷங்கரை தேர்வு செய்ததன் பின்னணியில் வேறு ஒரு திட்டம் உள்ளது என கூறி வருகிறார்கள்.

ராயுடு, பண்ட்

ராயுடு, பண்ட்

உலகக்கோப்பை அணித் தேர்வில் அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. இவர்கள் இருவரும் நான்காவது வரிசை பேட்ஸ்மேன் போட்டியில் இருந்தவர்கள். ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பர் என்ற அடையாளத்துடனும் இருந்தார்.

விஜய், தினேஷ், ராகுல்

விஜய், தினேஷ், ராகுல்

இந்த நிலையில், நான்காவது வரிசை பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டதால், இவர்கள் இருவரும் தங்கள் வாய்ப்பை இழந்தனர். மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் என்ற பெயருடன் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்டை முந்தி உள்ளே வந்தார். இவர்களுடன் மாற்று துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார் ராகுல்.

வாய்ப்பு கிடைக்காது

வாய்ப்பு கிடைக்காது

ஆனால், உலகக்கோப்பையில் விஜய் ஷங்கருக்கு அணியில் களமிறங்கி பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது. காரணம், விஜய் ஷங்கரை தேர்வு செய்ததே, கோலியின் செல்லப் பிள்ளையான ராகுலுக்கு அவரது இடத்தை வழங்கவே என்கிறார்கள் சில மாற்று சிந்தனை கிரிக்கெட் ரசிகர்கள்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஐபிஎல் தொடரில் விஜய் ஷங்கர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. மறுபுறம் ராகுல் பட்டையைக் கிளப்பி வருகிறார். இது, விஜய் ஷங்கரை ஓரங்கட்ட காரணமாக கூறப்படும். இதை வைத்தே துவக்க வீரர் ராகுலை அணிக்குள் நான்காவது வரிசை பேட்ஸ்மேனாக நுழைத்து விடுவார்கள் எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அரசியல்

அரசியல்

ஆக, ஆஸ்திரேலிய தொடரில் நன்றாக ஆடிய விஜய் ஷங்கரை வைத்து அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட்டை கழட்டி விட்டனர். பின்னர், ஐபிஎல் தொடரை வைத்து, தங்களுக்கு வேண்டிய ராகுலுக்கு இடமளித்து, விஜய் ஷங்கரை கழட்டி விட உள்ளனர். என்னப்பா.. ஒரே அரசியலா இருக்கு..!!

Story first published: Friday, May 3, 2019, 22:11 [IST]
Other articles published on May 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+