Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு போகும்.. ராசியில்லாத அணியை கழட்டி விட்டு காரணம் சொன்ன ஹர்பஜன் சிங்!

மும்பை : ஹர்பஜன் சிங் 2019 உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி வரை முன்னேறும் எனக் கூறினார். ஆனால், அதில் தென்னாப்பிரிக்கா அணியை அவர் விட்டுவிட்டார்.

ஏன் தென்னாப்பிரிக்கா அணியை விட மற்றொரு அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் என கணித்துள்ளார் ஹர்பஜன்.

World cup 2019 : Harbhajan Singh picks semi finalists of World Cup

ஹர்பஜன் சிங் பேட்டி அளித்த போது, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் என்று கூறினார். ஆனால், ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணியை அவர் குறிப்பிடவில்லை.

இது குறித்து அவர் விளக்கமும் அளித்தார். தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறாது என நான் கூறவில்லை. ஆனால், நியூசிலாந்து அணி பெரிய தொடர்களில் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள்.

பெரிய தொடர்களில் அந்த அணியின் வீரர்கள் அடிப்படை விஷயங்களை தொடர்ந்து சரியாக செய்வார்கள். அது முக்கிய தொடர்களில் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்கா அணி உலகக்கோப்பை உள்ளிட்ட பெரிய தொடர்களில் ராசியில்லாத அணியாக வலம் வருவது தொடர்கதை ஆகிவிட்டது. எப்போதும் சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக இருந்து வரும் தென்னாப்பிரிக்கா, ஏதோ காரணங்களால் உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடையும்.

கடந்த உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா மிக வலுவாக இருந்தது. பல சிறந்த வீரர்கள் அணியில் இடம் பெற்று இருந்தார்கள். எப்படியும் தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை வெல்லும் அல்லது இறுதிப் போட்டி வரையாவது செல்லும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடைபெறவில்லை.

இந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடுவோம் என்ற மனநிலையில் தான் உலகக்கோப்பை தொடரை அணுக திட்டமிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பை தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 18, 2019, 16:17 [IST]
Other articles published on May 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+