விஜய் ஷங்கரை அடுத்து.. ஹர்திக் பண்டியாவுக்கு காயம்? பதற்றத்தில் இந்திய அணி.. ரசிகர்கள் கவலை!!
கார்டிப் : இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா பயிற்சியின் போது காயமடைந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர் இந்திய வீரர்கள்.

அப்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காயத்தின் தன்மை குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, இந்தியா - வங்கதேச பயற்சிப் போட்டிக்கு முன் டாஸ் போடும் போது பேசிய கேப்டன் விராட் கோலி, கேதார் ஜாதவ் தவிர்த்து அனைத்து வீரர்களும் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளனர் என கூறினார்.
இதனால், ஹர்திக் பண்டியாவிற்கு பெரிய காயம் ஏதுமில்லை என கருதப்படுகிறது. ஒருவேளை, ஹர்திக் பண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் பெரிதாக இருக்கும்பட்சத்தில் அது இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரில் பெரும் பின்னடைவாக அமையும்.
முன்னதாக முதல் பயிற்சிப் போட்டிக்கு முன் விஜய் ஷங்கர் காயமடைந்தார். அதனால், முதல் பயிற்சிப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. எனினும், அவர் இரண்டாம் பயற்சிப் போட்டிக்கு தயாராகிவிட்டார். அவருக்கு அடுத்து, தற்போது பண்டியா காயமடைந்துள்ளார்.
இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வருவது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications