சும்மா இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்கும்னு சொன்னா போதுமா.. இறங்கி ஆடணும்.. வங்கதேச வீரர் அதிரடி!
லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிகள் என கணிக்கப்படும் சில அணிகளின் பெயர்களில் இந்தியாவும் ஒன்று.
ஆனால், இப்படி இந்த அணி ஜெயிக்கும், அந்த அணி ஜெயிக்கும் என கூறுவதால் மட்டும் ஜெயிக்க முடியுமா? உலகக்கோப்பை தொடரை வெல்ல கடினமாக முயற்சிக்க வேண்டும். களத்தில் இறங்கி ஆட வேண்டும் என்கிறார் மூத்த வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன்.

உலகக்கோப்பை வெல்லும் அணிகள் என தற்போது அனைவராலும் கூறப்படும் இரண்டு அணிகள் இந்தியா, இங்கிலாந்து. இந்த இரண்டு அணிகளும் நட்சத்திர வீரர்களுடன், பலம் வாய்ந்த அணிகளாக காட்சி அளிக்கிறது. அதனால், எளிதாக இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை வெல்லும் என கூறப்படுகிறது.
இதைத்தான் விமர்சித்துள்ளார் ஷகிப். அவர் கூறுகையில், இந்தியா, இங்கிலாந்து உலகக்கோப்பை வெல்லும் தகுதி உள்ள அணிகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே வெற்றியை கொடுத்து விடாது. நீங்கள் கடினமான அடிகளை கடந்து தான் உலகக்கோப்பை போன்ற தொடரை வெல்ல முடியும். வங்கதேச அணி இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறினார் ஷகிப்.


Click it and Unblock the Notifications