Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு இதைவிட சிறந்த அட்வைஸ் யாராலும் சொல்ல முடியாது.. துவைத்து காயவைத்த ஜான்டி ரோட்ஸ்!

மும்பை : ஒவ்வொரு கிரிக்கெட் தொடரின் போதும் இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்சி முறை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது.

இத்தனைக்கும், இந்திய அணிக்கு கேப்டனாக 74 சதவீத வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் கோலி. இதை வைத்துப் பார்த்தால், இந்திய அளவில் கோலி தான் சிறந்த கேப்டன். அப்படி இருந்தும், அவரது கேப்டன்சியின் குறைகள் குறித்து யாரும் பேசாமல் இருப்பதில்லை.

அருமையான அறிவுரை

அருமையான அறிவுரை

இந்த முறை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ், கோலி கேப்டன்சியில் எல்லாவற்றையும் தன் தலை மேல் போட்டுக் கொள்கிறார். அது சரியில்லை. மூத்த வீரர்களை அவர் நம்ப வேண்டும் என அருமையான அறிவுரை கூறி இருக்கிறார்.

தோனி அளவுகோல்

தோனி அளவுகோல்

ஒரு தலைவர் என்பவர் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் எப்போதும் முன்னே இருந்து வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. தோனியைப் பொறுத்தவரை உடற்தகுதி மற்றும் மனநிலை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு பெரிய அளவுகோல் அமைத்தார்.

கழுத்தைப் பிடிப்பது போல..

கழுத்தைப் பிடிப்பது போல..

எனவே, இங்கே நிறைய கேப்டன்சி முறைகள் உள்ளன. கோலி, ஒவ்வொரு விஷயத்தையும் கழுத்தைப் பிடிப்பது போல பிடித்துக் கொண்டு, போட்டியில் தன் முத்திரையை பதிக்க நினைக்கிறார். நீங்கள் நன்றாக ஆடும் வரை நல்லது. ஆனால், உங்களை சுற்றி இருக்கும் நபர்களையும் நீங்கள் ஈர்க்க வேண்டும்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

இந்திய அணியில் அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்தே இருக்கிறார்கள். எனவே, கோலி அந்த அணிக்கு ஒரே தலைவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (இங்கே தலைமைப் பண்பு கொண்ட மூத்த வீரர்களான தோனி, ரோஹித் சர்மா ஆகியோரைத்தான் குறிப்பிட்டு பேசுகிறார் ஜான்டி ரோட்ஸ்.)

நம்ப வேண்டும்

நம்ப வேண்டும்

ஒரு கேப்டனாக நிச்சயம் நீங்கள் எல்லா முடிவுகளையும் எடுக்கலாம். ஆனால், உங்களிடம் மூத்த வீரர்கள் இருந்தால், அவர்கள் இடங்களில் அவர்களை தலைவர்களாக இருப்பார்கள் என நம்ப வேண்டும். ஏனெனில், கேப்டனாக உங்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். டி20யை விட 50 ஓவர்களில் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். இருந்தாலும், நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

ஏன் தோல்வி?

ஏன் தோல்வி?

ஜான்டி ரோட்ஸ் கூறியதை புரிந்து கொண்டாலே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏன் மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் படுதோல்வி அடைகிறது என புரிந்து கொள்ளலாம். இந்திய அணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் ஜான்டி ரோட்ஸ் விளக்கம் அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்படி ஒரு நிலை..

இப்படி ஒரு நிலை..

அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டனாக இருந்தாலும், அவர் செய்வது தவறு என பலரும் கூறும் நிலை உலகில் கோலியை தவிர எந்த கேப்டனுக்கும் வந்திருக்காது. உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

Story first published: Saturday, May 18, 2019, 15:24 [IST]
Other articles published on May 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+