Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா? இல்லையா? சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு!

மும்பை : 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 உத்தேச வீரர்களில் ஒருவரான கேதார் ஜாதவ் சில வாரங்கள் முன்பு காயமடைந்தார்.

அதனால் அவர் உலகக்கோப்பை தொடரில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. பலரும் கேதார் ஜாதவ் விளையாடமாட்டார் என்ற முடிவுக்கே வந்து மாற்று வீரர்களை சிபாரிசு செய்து வந்தனர்.

இந்த நிலையில், கேதார் ஜாதவ் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

ஜாதவ் உறுதி

ஜாதவ் உறுதி

இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கேதார் ஜாதவ் உடற்தகுதியுடன் இருக்கிறார் என்பது குறித்த மருத்துவ சான்றிதழ்களை பெற்றுள்ளோம். அவர் இந்திய அணியுடன் வரும் புதன்கிழமை இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல உள்ளார் என உறுதிப்படுத்தினார்.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

காரணம், ஐபிஎல் தொடரில் ஜாதவ் மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை கொண்டிருந்தார். தொடருன் ரன் குவிக்கத் திணறினார். அதனால், அவர் காயமடைந்த போது, அதையே சாக்காக வைத்து, அவரை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்ற பேச்சு இருந்தது.

மாற்று வீரர் இல்லை

மாற்று வீரர் இல்லை

எனினும், தற்போது தேர்வுக் குழு தலைவரே அவர் இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்ல உள்ளார் என கூறி இருப்பதால், மாற்று வீரர் என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

உலகக்கோப்பை தொடரில் கேதார் ஜாதவ் ஆடாவிட்டால், அவரது இடத்திற்கு அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்களில் ஒருவரை தேர்வு செய்வார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது.

Story first published: Tuesday, May 21, 2019, 11:16 [IST]
Other articles published on May 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+