For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 2 பேர் தான் இந்தியாவுக்கு வேர்ல்டு கப் ஜெயிச்சுக் கொடுக்கப் போறாங்க!! அப்ப தோனி இல்லையா?

லண்டன் : 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் குறித்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறது என பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்கும் திறன் 2 வீரர்களுக்குத் தான் உள்ளது என இரண்டு இந்திய வீரர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

World cup 2019 : Michael Holding points out Kohli, Bumrah as X factors of India

சரி, அதில் ஒருவர் தோனியாகத்தான் இருப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த இருவர் யார்? தோனிக்கு ஏன் இடம் இல்லை?

2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா நிச்சயம் இறுதிப் போட்டி வரை செல்லும், அரையிறுதி வரை செல்லும் என கூறி வரும் நிலையில், மைக்கேல் ஹோல்டிங் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்கும் திறன் விராட் கோலி மற்றும் பும்ராவுக்கு உள்ளது என கூறியுள்ளார்.

உண்மையில், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் கோலி என்பதில் சந்தேகமில்லை. அதே போல, தற்போதைய உலகின் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளர் பும்ரா. இவர்கள் இருவரும் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

ஆனால், தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரும் வகையில் உதவி செய்து வருகிறது. மேலும், தோனி பேட்டிங்கில் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். டாப் ஆர்டரில் கோலி என்றால், மிடில் ஆர்டரில் தோனி தூணாக இருந்து அணியை வழி நடத்துகிறார்.

ஆனால், மைக்கேல் ஹோல்டிங் அனுபவத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை. இவரைப் போலவே, கெளதம் கம்பீரும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் குறித்து கூறுகையில் தோனியை பற்றி கூறாமல், நான்கு வீரர்கள் பெயரைக் குறிப்பிட்டார்.

Story first published: Friday, May 17, 2019, 17:06 [IST]
Other articles published on May 17, 2019
English summary
World cup 2019 : Michael Holding points out Kohli, Bumrah as X factors of India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+