For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரு நல்லா தானே ஆடினார்.. அவரை ஏன் டீம்ல எடுக்கலை.. இது சரியா? அசாருதீன் விளாசல்!

Recommended Video

World cup 2019 | ரிஷப் பண்ட்டை ஏன் தேர்வு செய்யவில்லை?.. அசாருதீன் விளாசல்!- வீடியோ

மும்பை : 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் மே மாத இறுதி முதல் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் அணியில் தேர்வாகவில்லை.

அசாருதீன் விமர்சனம்

அசாருதீன் விமர்சனம்

இதை சில முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாக வெளியாகி உள்ள செய்தியில், "இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஒரு இளம் வீரரை தேர்வு செய்யாமல் இருப்பது சரிதானா? அவர் நல்ல விக்கெட் கீப்பர் இல்லை என்றால் அப்புறம் ஏன் அவரை டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்கிறீர்கள்? தினேஷ் கார்த்திக்கிற்கு நிறைய வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது." என்று கூறப்பட்டுள்ளது.

மற்றபடி ஓகே!

மற்றபடி ஓகே!

இந்த ஒரு குறை தவிர்த்து உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு சமநிலையுடன் இருப்பதாகவும், பேட்டிங்கில் அதிக வீரர்களுடனும், பந்துவீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாகவும் கூறினார் அசாருதீன்.

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் இதுவரை பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, அணிக்கு தேவையான நேரத்தில் பொறுப்பற்ற ஷாட் ஆடி ஆட்டமிழந்து வருகிறார்.

தினேஷ் கார்த்திக் தேர்வு

தினேஷ் கார்த்திக் தேர்வு

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்யமுடியும் என்ற சூழலில், தேர்வுக் குழு அனுபவ தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளனர். தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதும் ஒரு காரணம்.

சரியான மாற்று வீரர்

சரியான மாற்று வீரர்

குறிப்பாக இந்திய அணி அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் பங்கேற்கும் போது தோனிக்கு காயம் ஏற்பட்டால், எந்த வீரர் சரியான தேர்வாக இருப்பார் என்ற கோணத்தில் சிந்தித்து தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளனர்.

Story first published: Wednesday, April 17, 2019, 15:02 [IST]
Other articles published on Apr 17, 2019
English summary
World cup 2019 : Mohammed Azharuddin questions Rishabh Pant selection over Dinesh Karthik
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+