அஸ்வின் உலகக்கோப்பையில் ஆடுறதுக்கு வாய்ப்பில்லை.. ஆனா அவரோட சீடர் ஆடப் போறாரே!
சண்டிகர் : 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வினிடம் கற்றுக் கொண்ட வித்தைகளை உலகக்கோப்பையில் இறக்கப் போவதாக ஆப்கன் கிரிக்கெட் அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான்.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. எனினும், பஞ்சாப் அணி ஆடிய விதம் நன்றாகவே இருந்தது. அஸ்வினின் கேப்டன்சி ஆங்காங்கே ஜொலித்தது.

பஞ்சாப் அணியில் 18 வயதே ஆன இளம் ஆப்கன் சுழற் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் இடம் பெற்றார். சக ஆப்கன் வீரர் ரஷித் கானுக்கு இணையாக புகழப்படும் முஜீப், ஐபிஎல் தொடரில் கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில், காயம் காரணமாக 5 போட்டிகளில் ஆடி, 3 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார்.
எனினும், இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுபவ சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினிடம் தான் நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாகவும், அவற்றை அடுத்து வரும் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்த உள்ளதாகவும் கூறினார் முஜீப்.
அஸ்வின் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாகவே பந்து வீசினார். பலரும் ஐபிஎல் தொடரில் பார்ம் அவுட் ஆன குல்தீப் யாதவுக்கு பதில் அனுபவம் வாய்ந்த அஸ்வினை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை.
அஸ்வின் உலகக்கோப்பை தொடரில் ஆடாவிட்டாலும், அவரின் "திடீர் மாணவர்" முஜீப் உர் ரஹ்மான் உலகக்கோப்பையில் ஆடவுள்ளார்.
ஆப்கன் அணி கடந்த உலகக்கோப்பை தொடரில் ஆடிய போது, அந்த அணியில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறவில்லை. 2019 உலகக்கோப்பை தொடரில் சுழற் பந்துவீச்சில் முன்னணியில் இருக்கும் இவர்களுடன் ஆப்கன் அணி ஆட உள்ளது. எப்படியும் அரையிறுதி வரை முன்னேறுவதில் உறுதியாக உள்ளது ஆப்கன் அணி.


Click it and Unblock the Notifications