Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா?

லண்டன் : உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது இந்தியா. இந்தப் போட்டியில் தோனி பீல்டிங் செய்ய, தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தார்.

பயற்சிப் போட்டி என்பதால், தினேஷ் கார்த்திக்கிற்கு இங்கிலாந்து மண்ணில் பயற்சி கொடுக்கும் நோக்கில் அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்தனர், என்பதைத் தாண்டி வேறு ஒரு காரணமும் இருக்கலாம் என கூறுகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்தித்தது இந்தியா. இந்தப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. பந்துவீச்சின் போது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்ய, தோனி பீல்டிங் செய்தார். இந்த மாற்றத்துக்கு தோனியின் காயமும் காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

தோனி காயம்?

தோனி காயம்?

ஐபிஎல் தொடரின் போது தோனி முதுகில் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பின் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. பின்னர், அந்த பிரச்சனை முழுமையாக குணமாகாமலேயே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு முன் நடக்கும் முக்கியத்துவமற்ற பயிற்சிப் போட்டியில் தோனியின் காயம் பெரிதானால், உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலை உருவாக்கும்.

பீல்டிங்

பீல்டிங்

இதனால் தான் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்ய, தோனி பீல்டிங் செய்தார் என கூறப்படுகிறது. இந்த பயிற்சிப் போட்டியில் தோனி பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க முடியும். ஆனால், அவர் பீல்டிங் செய்தார்.

தோல்வி

தோல்வி

எனவே, தோனியின் முதுகு நரம்புப் பிடிப்பு பிரச்சனை பெரிதாக இருக்காது என்று நிம்மதி அடையலாம். இது ஒருபுறமிருக்க, இந்தப் போட்டியில் பேட்டிங்கில் தோனி, தினேஷ் கார்த்திக், கோலி உட்பட அனைத்து அனுபவ வீரர்களும் சொதப்பினர். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, May 25, 2019, 22:28 [IST]
Other articles published on May 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+