Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 தடவை முடியலை.. ஆனா இந்த முறை இந்தியாவை ஜெயிப்போம்.. இன்சமாம் நம்பிக்கை.. உண்மை நிலை என்ன?

இஸ்லாமாபாத் : உலகக்கோப்பை என்றாலே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான் பலருக்கு நினைவுக்கு வரும்.

இதுவரை 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வென்றதில்லை. சுமார் ஆறு உலகக்கோப்பை தொடர்களாக இந்த சோதனை பாகிஸ்தான் அணியை தொடர்ந்து வருகிறது.

World cup 2019 : Pakistan will end losing streak against in world cup says Inzamam-ul-Haq

இந்த நிலையில், 2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக் குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக்.

அவர் கூறுகையில், "மக்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் "இந்திய அணியை உலகக்கோப்பையில் வீழ்த்தினால் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்" என்று கூட கூறுகிறார்கள்" என்றார்.

பாகிஸ்தான் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த முறை பாகிஸ்தான் அணி, இந்திய அணியிடம் உலகக்கோப்பை போட்டிகளில் தோற்று வருவதை தடுத்து நிறுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இன்சமாம்.

தற்போது பாகிஸ்தான் அணி படுமோசமான நிலைமையில் இருக்கிறது. கடைசியாக ஆடிய 10 போட்டிகளில் தோல்வி. மேலும், பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வி அடைந்து பரிதாபமான நிலையில் இருக்கிறது.

எனவே, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் அரையிறுதி செல்லாவிட்டாலும், இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும்.

Story first published: Sunday, May 26, 2019, 18:28 [IST]
Other articles published on May 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+