Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹைதராபாத் என்றாலே இப்படி தான்.. அம்பதி ராயுடு நீக்கம் குறித்து வெளியான சர்ச்சை கருத்து!

Recommended Video

World cup 2019 | Ojha Controversial Tweet | ராயுடு நீக்கம் குறித்து வெளியான சர்ச்சை கருத்து!- வீடியோ

ஹைதராபாத் : 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு தேர்வாகவில்லை.

இது குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், ஹைதராபாத் ரஞ்சி அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணியில் முன்பு ஆடியவருமான பிரக்யான் ஓஜா, சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அது பல விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது.

அம்பதி ராயுடு நீக்கம்

அம்பதி ராயுடு நீக்கம்

இந்திய அணியில் நான்காவது இடத்தில் பேட்டிங் ஆட அம்பதி ராயுடு தான் சரியான வீரர் என்ற நிலை, ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு வரை இருந்தது. ஆனால், அந்த தொடரின் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனக் கூறி அவரை நீக்கியது தேர்வுக் குழு.

ராயுடு கிண்டல்

அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை அணியில் தேர்வு செய்தனர். விஜய் ஷங்கர் முப்பரிமான திறன் கொண்டவர் என தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறி இருந்தார். அதை வைத்தே விஜய் ஷங்கரை கிண்டல் செய்திருந்தார் அம்பதி ராயுடு.

ஓஜா கருத்து

இதை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓஜா, "ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களின் கவனிக்கத்தக்க நிலை.. இதே நிலையில் நானும் இருந்துள்ளேன்." என ராயுடு நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் வீரர்கள் நிலை

ஹைதராபாத் வீரர்கள் நிலை

அம்பதி ராயுடு, ஓஜா இருவரும் ஹைதராபாத் மாநில அணிக்காக ஆடியவர்கள் என்பதை வைத்து, ஹைதராபாத் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார் ஓஜா. பல ஆண்டுகளுக்கு முன்பு விவிஎஸ் லக்ஷ்மனுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், இது போன்ற சர்ச்சை எழுந்தது.

உண்மை இல்லை?

உண்மை இல்லை?

ஆனால், ஓஜா பதிவை பார்த்த பலரும், ஓஜா தன் நண்பருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதில் உண்மை இல்லை என்றே கருத்து கூறியுள்ளனர். சிலர் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஹைதராபாத்தை சேர்ந்தவர் தான் என கூறியுள்ளனர்.

Story first published: Friday, April 19, 2019, 16:08 [IST]
Other articles published on Apr 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+