ஆத்தாடி.. எம்புட்டு பணம்! ஜெயித்தாலும் பரிசு.. தோற்றாலும் பரிசு.. உலகக்கோப்பை கிரிக்கெட் ஜாக்பாட்!!
லண்டன் : வரும் மே 30 முதல் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. அந்த தொடருக்கான மலைக்க வைக்கும் பரிசுத் தொகை விவரம் வெளியாகி இருக்கிறது.
வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக சுமார் 28 கோடி கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி பல்வேறு வகைகளில் வெற்றி பெறும் அணிகள் பரிசுத் தொகையினை வெல்லும்.

பத்து அணிகள் லீக் சுற்றில் ரவுண்டு ராபின் முறையில் மோத உள்ள இந்தத் தொடரில், நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
- லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.28 லட்சம் பரிசுத் தொகையாக கிடைக்கும். (40,000 டாலர்)
- லீக் போட்டியில் பங்கேற்று, அரையிறுதி செல்லாத ஆறு அணிகளுக்கு ரூ.70.20 லட்சம் பரிசுத் தொகையாக கிடைக்கும். (100,000 டாலர்)
- அரையிறுதிக்கு முன்னேறி அதில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா ரூ.5.6 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும். (800,000 டாலர்)
- இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.14.04 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும். (20,00,000 டாலர்)
- 2019 உலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.28.08 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும். (40,00,000 டாலர்)
- ஒட்டு மொத்தமாக சுமார் ரூ.70 கோடி அளவுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
- உலகக்கோப்பை வரலாற்றிலேயே இந்த அளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.
- மே 17, 2019 அன்று இருந்த டாலருக்கு நிகரான இந்திய மதிப்பின்படி பரிசுத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
Story first published: Friday, May 17, 2019, 15:49 [IST]
Other articles published on May 17, 2019


Click it and Unblock the Notifications