Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடே.. ஜடேஜா சூப்பரா பேட்டிங் செய்ய இதுதான் காரணமாம்.. இதே மாதிரி ஆடுவாரா?

லண்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயற்சிப் போட்டியில் அரைசதம் அடித்தார் ரவீந்திர ஜடேஜா.

மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சரியாக ஆடாத நிலையில், ஜடேஜா பொறுப்பாக 50 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். ஜடேஜாவின் பேட்டிங் சராசரியான நிலையில் தான் இதுவரை இருந்தது.

World cup 2019 : Ravindra Jadeja worked on his batting through out IPL

ஆனால், பயிற்சிப் போட்டியில் தான் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்ய என்ன காரணம் என்பது குறித்த ரகசியத்தை கூறினார் ஜடேஜா. "ஐபிஎல் தொடர் முழுவதும் நான் என் பேட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தேன். சில சமயம் போட்டிகளில் கூட ஷாட் தேர்வு செய்வது போன்ற அடிப்படைகளை முயற்சித்து பார்த்தேன்" என்றார் ஜடேஜா.

ஐபிஎல் தொடரில் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். அந்த தொடரில் பெரியளவில் ரன்கள் குவிக்கவில்லை. எனினும், அந்த தொடரில் பெற்ற பயிற்சி தான் உலகக்கோப்பைக்கு உதவப் போகிறது என்கிறார்.

ஒருவேளை ஜடேஜா இந்த உலகக்கோப்பையில் ரன் குவிக்கத் துவங்கினால் இந்தியாவுக்கு எது பெரும் சாதகமாக மாறும். காரணம், ஜடேஜா ஆல்-ரவுண்டர் என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேனாக இருப்பார்.

ஏற்கனவே, அவர் கூடுதல் பேட்ஸ்மேன் என்ற பெயரில் இருந்தாலும், பேட்டிங்கில் ரன் குவிக்கவில்லை. தற்போது நம்பகமான பேட்ஸ்மேனாக ஜடேஜா மாறினால் இந்திய அணியின் பேட்டிங் பலமான ஒன்றாக காட்சி அளிக்கும்.

Story first published: Sunday, May 26, 2019, 19:10 [IST]
Other articles published on May 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+