அவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அவரை வெளியே தள்ளிட்டு.. ஷமியை ஆட வைங்க.. லாஜிக் சொல்லும் கங்குலி!
லண்டன் : உலகக்கோப்பை அணியில் புவனேஸ்வர் குமாரை விட முகமது ஷமிக்கு தான் முக்கியத்துவம் அளித்து, போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் என கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.
2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில், வேகப் பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

பும்ரா - புவி மட்டுமே
இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி என மூன்று சிறந்த பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். இவர்களில் இப்போதைக்கு பும்ரா, புவனேஸ்வர் குமார் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பார்கள் என்ற நிலை உள்ளது.

திட்டம் சரியல்ல
ஷமி மூன்றாவது பந்துவீச்சாளராக, மாற்று பந்துவீச்சாளராகவே செயல்படுவது போன்ற தோற்றம் உள்ளது. ஆனால், இந்த திட்டம் சரியல்ல. முகமது ஷமி ஐபிஎல் மட்டுமல்லாது, கடந்த ஆண்டு முழுவதுமே சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்பதால் நான் அவரைத்தான் ஆடவைப்பேன் என்கிறார் கங்குலி.

புவி வேண்டாம்
மேலும், புவனேஸ்வர் குமார் கடந்த 4-5 மாதங்களில் தன் பார்மில் பின்தங்கி இருக்கிறார். அவர் விரைவில் மீண்டு வருவார் என புவனேஸ்வர் குமாரை மூன்றாம் இடத்திற்கு தள்ளுமாறு கூறுகிறார் கங்குலி.

மூவர் கூட்டணி
உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் இந்திய அணியில் பும்ரா, ஷமி, ஹர்திக் பண்டியா ஆகிய மூவர் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற வேண்டும் என்பதே கங்குலியின் திட்டமாக உள்ளது. ஏன் ஷமிக்கு கங்குலி ஆதரவாக பேசுகிறார்?

ஜாகிர் கான் ஆதரவு
அது குறித்து அவரே கூறினார். கடந்த ஐபிஎல் தொடரின் போது முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கானுடன் பேசிக் கொண்டு இருந்த போது, ஷமி போல வேறு எந்த வேகப் பந்துவீச்சாளரும் சமீப காலத்தில் செயல்படவில்லை அவரது பந்துவீச்சு பெருமளவு முன்னேறி உள்ளதாக ஜாகிர் கான் தெரிவித்ததாக கூறியுள்ளார் கங்குலி.


Click it and Unblock the Notifications