Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறை உலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. இந்த 4 டீமுக்கு வாய்ப்பு இருக்கு.. ஷாக் கொடுத்த கங்குலி!

டெல்லி : 2019 உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி வரை செல்லும் என கணித்துள்ளார் முன்னாள் இந்திய அணி கேப்டன் சௌரவ் கங்குலி.

2019 ஐபிஎல் தொடர் முடிந்த, இரு வாரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து நாடுகளின் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

4 அணிகள்?

4 அணிகள்?

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி எந்த அணிகள் அரையிறுதி வரை செல்லும் என கணித்துள்ளார். அவரது கணிப்பின் படி இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி செல்லும் என கூறியுள்ளார்.

ரவுண்டு ராபின் முறை

ரவுண்டு ராபின் முறை

இந்த முறை உலகக்கோப்பை தொடர் ரவுண்டு ராபின் முறைப்படி நடைபெற உள்ளது. அதன்படி, தொடரில் பங்கேற்க உள்ள பத்து அணிகளும் மற்ற அணிகளுடன் மோதும். இந்த சுற்றின் முடிவில் வெற்றியின் அடிப்படையில், அதிக புள்ளிகளை பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும்.

எளிதாக இருக்காது

எளிதாக இருக்காது

இதைக் குறிப்பிட்ட கங்குலி, இந்த முறை உலகக்கோப்பை மிகுந்த போட்டித்தன்மை கொண்ட தொடராக இருக்கும் என கூறினார். மேலும், இந்த தொடரில் எந்த அணியும் எளிதாக இருக்காது என்பதால், சிறந்த நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார். கங்குலியின் இந்த கருத்து இந்தியா எளிதாக அரையிறுதி சென்றுவிடும் என எண்ணிக் கொண்டு இருக்கும் பல ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

குல்தீப் யாதவ் நிலை

குல்தீப் யாதவ் நிலை

உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது இந்தியா சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். ஆனால், அதன் பின் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் தொடரில் பார்ம் இழந்தார். அது பற்றி கங்குலியிடம் கேட்கப்பட்டது.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

கங்குலி, "அவர் உலகக்கோப்பையில் விக்கெட்கள் எடுப்பார் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவர் அருமையான பந்துவீச்சாளர்" என்றார். பும்ரா தவிர்த்து எந்த முன்னணி இந்திய அணி பந்துவீச்சாளரும் ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 25, 2019, 21:49 [IST]
Other articles published on Apr 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+