For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாரும் கிளம்புங்க.. 2019 உலகக்கோப்பை டிக்கெட்களை வித்து முடிச்சுட்டோம்.. அதிர்ச்சி அளித்த ஐசிசி

லண்டன் : இங்கிலாந்தில் நடைபெற உள்ள 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன என கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட்கள் விற்பனை முன்பே துவங்கப்பட்டது.

டிக்கெட் தீர்ந்தாச்சு

டிக்கெட் தீர்ந்தாச்சு

இந்நிலையில் ஐசிசி பொது மேலாளர் காம்ப்பெல் ஜேமீசன் உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்கள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார். அதில் இந்தியா ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் முழுமையாக விற்று விட்டதாகவும் கூறினார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஒட்டு மொத்தத்தில் 3500 டிக்கெட்கள் மட்டுமே மீதம் இருப்பதாக குறிப்பிட்டார். இந்திய ரசிகர்கள் இனி டிக்கெட் வாங்க முடியாது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி தான். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், பலரால் நேரில் கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இதில் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். அது ஜூன் 16 அன்று நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட்களும் முடிந்து விட்டன என கூறியுள்ளார் காம்ப்பெல்.

பொறுத்திருந்து டிவியில் பார்ப்போம்

பொறுத்திருந்து டிவியில் பார்ப்போம்

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14 அன்று நடைபெறுகிறது. இந்தியா கடந்த 2011இல் உலகக்கோப்பை வென்ற நிலையில், கோலி தலைமையில் மூன்றாவது 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லுமா என்பதை நாம் ஏழு மாதம் பொறுத்திருந்து டிவியில் தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, November 30, 2018, 19:13 [IST]
Other articles published on Nov 30, 2018
English summary
All the tickets are sold out for India matches in World Cup 2019 says ICC GM.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+