Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஆகிப் போச்சே.. இந்தியா - நியூசி. போட்டியில் காயம் காரணமாக இளம் வீரர் நீக்கம்!

லண்டன் : நியூசிலாந்து வீரர் டாம் லாதம் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 முதல் துவங்க உள்ளது. இதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளது.

World cup 2019 : Tom Latham will miss warm up matches due to injury

இந்தியா - நியூசிலாந்து பங்கேற்க உள்ள பயிற்சிப் போட்டி மே 25 அன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் டாம் லாதம் பங்கேற்க மாட்டார் என அந்த அணி அறிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக இதுவரை ஒருநாள் போட்டியில் பங்கேற்று இராத டாம் ப்ளன்டேல் விக்கெட் கீப்பிங் செய்வார் எனவும் நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை தொடருக்காக இங்கிலாந்து கிளம்பும் முன் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது. அந்தப் போட்டியில் டாம் தன் விரலில் காயமடைந்தார்.

இதனால், உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் அவர். மேலும், முதல் சில உலகக்கோப்பை போட்டிகளில் ஆடும் வாய்ப்பையும் அவர் இழக்கலாம் என கூறப்படுகிறது.

இந்திய அணி மே 25 அன்று நியூசிலாந்து அணியையும், மே 28 அன்று வங்கதேச அணியையும் பயிற்சிப் போட்டியில் சந்திக்க உள்ளது.

Story first published: Friday, May 24, 2019, 16:10 [IST]
Other articles published on May 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+