Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூணே மாசம்.. உலகக்கோப்பையில் விஜய் ஷங்கர்.. இடம் கொடுத்த அண்ணன் ஹர்திக் பண்டியாவுக்கு நன்றி!

Recommended Video

WC 2019: உலகக்கோப்பையில் விஜய் ஷங்கர், காரணம் ஹர்திக் பண்டியா- வீடியோ

சென்னை : தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர் 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று பலரையும் வியக்க வைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தான் விஜய் ஷங்கர் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமாகி மூன்றே மாதத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

திடீர் தேர்வு

திடீர் தேர்வு

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆட திடீரென தேர்வு செய்யப்பட்டார் விஜய் ஷங்கர். ஹர்திக் பண்டியா ஆட முடியாத நிலையில், அவருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டு, ஆஸ்திரேலியா விரைந்தார் விஜய்.

அருமையான ஆட்டம்

அருமையான ஆட்டம்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை தொடர்ந்து, நியூசிலாந்து தொடரிலும் இடம் பெற்றார். அங்கே நடந்த ஒருநாள் தொடரில் சில போட்டிகளில் அருமையாக போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு இரண்டு 40+ ரன்கள் அடித்தார்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

விஜய் ஷங்கர் எந்தவித பதற்றமும் இன்றி ரன் சேர்த்த விதம், பந்துகளை வீணடிக்காமல் தொடர்ந்து ரன் எடுப்பது, தேவைப்படும் நேரத்தில் அதிரடி காட்டுவது என கலக்கினார். அவரது ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சி இருந்தது.

பேட்ஸ்மேன் மட்டுமே

பேட்ஸ்மேன் மட்டுமே

ஆனால், ஹர்திக் பண்டியா போல வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என கூறப்பட்ட விஜய், பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஹர்திக் பண்டியா மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த நிலையில், அவருக்கு மாற்றாக வந்த விஜய் ஷங்கர் பேட்ஸ்மேன் என்ற நிலையில் மட்டுமே அனைவராலும் பார்க்கப்பட்டார். பண்டியா, விஜய் இருவரும் ஒரே நேரத்தில் அணியில் இருக்கலாம் என்ற நிலையும் ஏற்பட்டது.

சரியான வீரர்

சரியான வீரர்

இந்திய அணியில் நான்காவது வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையாத நிலையில், அந்த இடத்திற்கு விஜய் ஷங்கர் பொருத்தமாக இருப்பார் என்று கருதி அவரை அணியில் சேர்த்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.

காரணம் பண்டியா

காரணம் பண்டியா

விஜய் ஷங்கர் இப்படித் தான் மின்னல் வேகத்தில், மூன்றே மாதத்தில் அனைவரையும் கவர்ந்து உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார். இது எல்லாவற்றுக்கும் மூல காரணமான, ஹர்திக் பண்டியாவுக்கு தான் விஜய் நன்றி சொல்ல வேண்டும். அப்படி ஹர்திக் பண்டியா என்னதான் செய்தார்?

சர்ச்சை மற்றும் தடை

சர்ச்சை மற்றும் தடை

ஜனவரியில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பண்டியா, பெண்கள் குறித்தும், பெண்களுடன் தான் பழகுவது குறித்தும் மனம் போன போக்கில் கமெண்ட் அடிக்க, அது கடும் எதிர்ப்பை சந்தித்து, ஹர்திக் பண்டியாவை தடை செய்யும் வரை சென்றது.

இடைவெளியில் வாய்ப்பு

இடைவெளியில் வாய்ப்பு

அந்த இடைவெளியில் தான் வாய்ப்பு பெற்றார் விஜய். அதாவது, தேவையில்லாத பேச்சால் அணியில் தன் இடத்தை விஜய் ஷங்கருக்கு தாரை வார்த்தார் ஹர்திக் பண்டியா. அதுதான் உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் வரை வளர்ந்துள்ளது. அதனால், வயதில் சிறியவர் என்றாலும், "அண்ணன் ஹர்திக் பண்டியா"வுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் விஜய்.

Story first published: Tuesday, April 16, 2019, 15:39 [IST]
Other articles published on Apr 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+